தமிழக அரசுக்கு மிகப்பெரிய வெற்றி : சட்ட அமைச்சர் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு மிகப்பெரிய வெற்றி : சட்ட அமைச்சர் பெருமிதம்

Added : பிப் 19, 2019
Advertisement

சென்னை: ''ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, தமிழக அரசுக்கு கிடைத்த, மிகப்பெரிய வெற்றி,'' என, தமிழக சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, ஆலை நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஆலையை திறக்க உத்தரவிட்டது.விசாரணை நடந்தபோது, தமிழக அரசு சார்பில், 'இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம், தேசிய தீர்ப்பாயத்திற்கு இல்லை' என, வாதிடப்பட்டது; அதை, தீர்ப்பாயம் ஏற்கவில்லை.தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பாயத்தில் வைத்த வாதத்தை, உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்தோம்.அதை ஏற்று, 'ஆலையை திறக்க உத்தரவிட, தேசிய தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை' எனக்கூறி, தீர்ப்பாயம் உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது தமிழக அரசுக்கு கிடைத்த, மிகப்பெரிய வெற்றி.ஆலை நிர்வாகம், மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றால், வழக்கை சந்திப்போம். தொழில் நிறுவனங்கள், தொழில் துவங்க வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.அதற்காகத்தான் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. ஆனால், தொழில் நிறுவனம், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, சி.வி.சண்முகம் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X