பா.ஜ., - எம்.பி., கீர்த்தி ஆசாத் காங்.,கில் ஐக்கியம்| Dinamalar

பா.ஜ., - எம்.பி., கீர்த்தி ஆசாத் காங்.,கில் ஐக்கியம்

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (21)
Advertisement
   பா.ஜ., - எம்.பி., கீர்த்தி ஆசாத் காங்.,கில்  ஐக்கியம்


புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை விமர்சனம் செய்ததற்காக, பா.ஜ.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.,யுமான, கீர்த்தி ஆசாத், 60, நேற்று, காங்.,கிரசில் ஐக்கியம் ஆனார்.கடந்த, 1983ல், உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றவரான கீர்த்தி ஆசாத், பா.ஜ.,வில், 26 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பீஹார் மாநிலம், தர்பங்காவில், மூன்று முறை, எம்.பி.,யாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.டில்லி கிரிக்கெட் சங்கத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லியை, 2015ல், கீர்த்தி ஆசாத் கடுமையாக விமர்சனம் செய்தார். அதைத் தொடர்ந்து, பா.ஜ.,வில் இருந்து, அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக, கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்த கீர்த்தி ஆசாத், நேற்று, ராகுல் முன்னிலையில், காங்.,கில் சேர்ந்தார்.பின், நிருபர்களிடம் கீர்த்தி ஆசாத் கூறியதாவது:என் தந்தை, பகவத் ஜா ஆசாத், தன், 26 வயதில், காங்., மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான, ஜவஹர்லால் நேருவால், எம்.பி., ஆக்கப்பட்டவர். காங்., குடும்பத்தை சேர்ந்த நான், தற்போது, மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளேன்.ரபேல் விமான ஒப்பந்தத்தில் தவறு நடந்துள்ளதாக, பா.ஜ.,வை சேர்ந்த, எம்.பி.,க்கள் பலர் சந்தேகப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.







வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-பிப்-201915:17:01 IST Report Abuse
குயிலன் விளையாட்டு செய்திகள்ள போட வேண்டியத இங்கே போட்டீய போல.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-பிப்-201914:08:17 IST Report Abuse
Nallavan Nallavan எந்த மாதிரி ஆளெல்லாம் காங்கிரசில் ஐக்கியம் ஆவுது -ன்னு கவனியுங்க ......
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
19-பிப்-201910:50:28 IST Report Abuse
I love Bharatham பாக்கிஸ்தான் ஆதரவு சீத்து வெளியேறினான் ....இப்போ கீர்த்தி ...நாளை ...சத்ரு....சாக்கடை அதுவாகவே கிளீன் ஆவது சந்தோஷம் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X