அன்றாடம் போடுறாங்க 'ஆட்டம்'

Added : பிப் 19, 2019
Share
Advertisement
உக்கிரமாக வெயில் கொளுத்துவதால், நகர் வலம் செல்லாமல், வீட்டுக்குள் முடங்கியிருந்த சித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்திருந்த, 'வாட்ஸ்அப்' தகவல்களை பார்த்துக் கொண்டிருந்தாள். மித்ராவும், இணைந்து கொண்டாள்.இருவருக்கும், இஞ்சி டீ, முந்திரி பக்கோடா கொடுத்து, உபசரித்தாள், சித்ராவின் தாய்.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் தொடர்பான 'மெசேஜ்' பார்த்ததும், ''ஏற்கனவே சொன்ன மாதிரி,
 அன்றாடம் போடுறாங்க 'ஆட்டம்'

உக்கிரமாக வெயில் கொளுத்துவதால், நகர் வலம் செல்லாமல், வீட்டுக்குள் முடங்கியிருந்த சித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்திருந்த, 'வாட்ஸ்அப்' தகவல்களை பார்த்துக் கொண்டிருந்தாள். மித்ராவும், இணைந்து கொண்டாள்.இருவருக்கும், இஞ்சி டீ, முந்திரி பக்கோடா கொடுத்து, உபசரித்தாள், சித்ராவின் தாய்.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் தொடர்பான 'மெசேஜ்' பார்த்ததும், ''ஏற்கனவே சொன்ன மாதிரி, நம்மூர் அதிகாரிங்க, ரெண்டு பேரையுமே மாத்திட்டாங்க, பார்த்தீங்களா...'' என, கொக்கி வீசினாள் மித்ரா.''ஆமாப்பா... கலெக்டரா, திருச்சியில இருந்தவரு வந்துட்டாரு. கார்ப்பரேஷன் கமிஷனரா இருந்த விஜயகார்த்திகேயன், 'பெண்டிங்' கோப்புகள்ல கையெழுத்து போட்டுட்டு, நேத்து சாயாங்காலம் நகரியல் பயிற்சி மைய இயக்குனரா, பதவி ஏத்துக்கிட்டாரு. திருப்பூர் சப்-கலெக்டரா இருந்தவரை, கார்ப்பரேஷன் கமிஷனரா நியமிச்சிருக்காங்க. அவரு, நாளைக்குதான் பதவியேற்பார் போலிருக்கு. துணை கமிஷனரா வரப்போறவரு, நல்ல நாள் பார்த்துக்கிட்டு இருக்காரு...''குறுக்கிட்டு பேச முயன்ற மித்ராவை தடுத்து நிறுத்திய சித்ரா, ''கலெக்டருக்கு, ரேஸ்கோர்ஸ்லயும், கார்ப்பரேஷன் கமிஷனருக்கு ஆர்.எஸ்.புரத்திலும் 'கவர்மென்ட்' வீடு இருக்கு. வீட்டை காலி செய்றதுக்கு, பழைய கலெக்டர் ஹரிஹரன், 'டைம்' வாங்கியிருக்காரு. கமிஷனரோ, வீட்டை உடனடியா காலி செஞ்சு, ரேஸ்கோர்ஸ்ல இருக்குற, 'அபார்ட்மென்ட்'டுக்கு குடி போறாரு. 'பேக்கிங்' வேலை ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு'' என்றாள்.''ரேஸ்கோர்ஸ்...ஆ...'' என, வாயைப்பிளந்தாள் மித்ரா.''உள்ளாட்சித்துறையில இருக்கறவங்களுக்கு, அதே துறைக்குள்ளே 'டிரான்ஸ்பர்' கொடுத்திருக்காங்க. அதனால, எலக்ஷனுக்கு அப்புறம் சில அதிகாரிகளுக்கு மறுபடியும் 'ஒசந்த' பதவி கெடைக்கும் போலிருக்கு. 'லக்கேஜ்'களை எடுத்துட்டுப் போறதுக்கு வசதியா, ரேஸ்கோர்ஸ்ல குடியிருக்கப் போறாருன்னு பேசிக்கிறாங்க...''''ஓ... அப்படியா சங்கதி...''''கவர்மென்ட் ஆபீசுல தகவல் உரிமை சட்டத்துல யாரு தகவல் கேட்டாலும், ஒழுங்கா பதில் சொல்றதில்லையாமே...'' என, இழுத்தாள் சித்ரா.''ஆமாக்கா... யாராவது தகவல் கேட்டு, கார்ப்பரேஷனுக்கு மனு கொடுத்தா, பதில் குடுத்த மாதிரி, தபால் 'ரெடி' பண்ணி அனுப்புறாங்க. அதுல, 'நீங்கள் கேட்ட தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது'ன்னு, 'கவரிங் லெட்டர்' மட்டும் அனுப்புறாங்க. ஆனா, எந்த இணைப்பும் இருக்கறதில்ல. கிழக்கு மண்டலத்துல இந்த 'டெக்னிக்'கை, 'பாலோ' பண்ணி, நெறையப்பேருக்கு, வெத்து தபால் அனுப்புறாங்க...''''இதே கிழக்கு மண்டலத்துல, மனையை முறைப்படுத்துறதுக்கு கொடுத்த மனுக்களையும் கெடப்புல போட்டுருக்காங்களாமே...''''எல்லா கார்ப்பரேஷன் ஆபீஸ்லயும் இதே நெலமைதான். 'ஈஸ்ட்', 'நார்த்' ஜோன்ல ரொம்பவே அதிகமா இருக்கு. 'கரன்சி' வெட்டாம எந்த வேலையும் நடக்குறதில்லைன்னு சொல்றாங்க. அரசாங்க அறிவிப்பை நம்பி, மனையை முறைப்படுத்துறதுக்கு மனு கொடுத்தவங்க, மாசக்கணக்குல நடையாய் நடக்குறாங்க. எப்ப போனாலும், ஒங்க பேரு என்ன; ஒங்க மொபைல் நம்பர் சொல்லுங்கன்னு, ஒரு நோட்டுல எழுதி வச்சிருக்கிறாங்க... ஆனா, எதுவுமே நடக்குறதில்லைன்னு பொதுஜனங்க புலம்புறாங்க...''''அக்கா... போரடிக்குது... போலீஸ் விவகாரம் இருந்தா... சொல்லு'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''போலீஸ்னாலே... மாமூல்தானே... ரூரல் ஏரியால, 'கள்' விற்பனை அமோகமா நடக்குற மாதிரி, சீட்டாட்டமும் நடக்குது. கோவில்பாளையம் 'லிமிட்'டுல, சரவணம்பட்டி பக்கத்துல, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., வோட ரத்த சொந்தம், 'கிளப்' நடத்துறாரு''''ஸ்டேஷன்ல இருந்து எஸ்.பி., ஆபீஸ் வரைக்கும், மாசம் தவறாம 'பங்கு' போயிடுது. ஒரு நாளைக்கு, ரூ.15 லட்சம் வரை பணம் புழங்குது; வாரக்கடைசியில, ரூ.30 லட்சம் வரைக்கும், 'கரன்சி' விளையாடுது. கரெக்டா கப்பம் கட்டுறதுனால, போலீஸ்காரங்க கண்டுக்கறதில்லையாம்'' என்றாள்.மித்ரா, ''அதெல்லாம் சரி, அதே ரூரல் ஏரியால இருக்கற கருமத்தம்பட்டியில, 'பார்மசிஸ்ட்' ஒருத்தரு வைத்தியம் பார்க்குறதா, கேள்விப்பட்டேனே, உண்மையா...'' என்று கேட்டாள்.''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன்... 'மெடிக்கல் ஷாப்'பில் இடம் ஒதுக்கி, வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்காரு. இது மாதிரி ஏகப்பட்ட போலி டாக்டருங்க இருக்காங்க. சுகாதாரத்துறை அதிகாரிங்க 'கப்சிப்'னு இருக்காங்க. பி.ஆர்.எஸ்., மைதானத்துல இருக்கற போலீஸ் ஆஸ்பத்திரி 'லேடி' டாக்டரு, 'கரெக்ட்' டைமுக்கு வர்றதில்லைன்னு, போலீஸ் வட்டாரத்துல புலம்பல் ஆரம்பிச்சிருக்கு. சில நாள் வேலைக்கே வர்றதில்லையாம்; மறுநாள் வந்ததும், வருகை பதிவேட்டை சரி செஞ்சிடுறாங்களாம்'' என்றாள் சித்ரா.''ஓ... அப்படியா...''''இந்த, 'போஸ்டிங்' ரொம்ப நாளா காலியா இருந்துருக்கு. இந்த இடத்துக்கு போகப்போறதா, 'லேடி' டாக்டரோட தோழி சொல்லியிருக்காங்க. இரவோடு இரவா, செல்வாக்கை பயன்படுத்தி, 'போஸ்டிங்' வாங்கியிருக்காங்க. இப்ப, 'மெடிக்கல் சர்ட்டிபிகேட்' கேட்டா கூட, கொடுக்கறதில்லைன்னு போலீஸ்காரங்க புலம்புறாங்க...''''கார்ப்பரேஷன் ஸ்கூல்கள நிர்வகிக்கிறதுக்குன்னு, சி.இ.ஓ., நியமிச்சிருக்காங்களாமே...'' - மித்ரா, கல்வித்துறை விவகாரங்களை கிளறினாள்.''திருச்சி மாவட்டத்துல, தலைமையாசிரியரா இருக்கறவரு, பதவி உயர்வுல வர்றாரு. இன்னும் பதவி ஏற்கலை. அதுக்குள்ள, 'பிரண்ட்ஸ்' மூலமா, கார்ப்பரேஷன் ஸ்கூல் நிலவரம்; டீச்சர்ஸ் நடவடிக்கை; அசோசியேஷன் பெயரைச் சொல்லி மட்டம் போடுறவங்க, யாரு யாருன்னு 'லிஸ்ட்' 'ரெடி' பண்ணியிருக்காரு... பதவிக்கு வந்ததும், அவரோட நடவடிக்கை எப்படி இருக்கும்னு தெரியலை...''அங்கிருந்த நாளிதழை புரட்டியபோது, 'லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது'ன்னு செய்தி வெளியாகி இருந்தது.அதைப்படித்த மித்ரா, ''ஆர்.டி.ஓ., ஆபீசுல... ஒருத்தரு 'கல்லா' நெறைக்கிறாராமே..'' என, 'ரூட்'டை மாற்றினாள்.''கல்லா நெறைக்காத கவர்மென்ட் ஆபீஸ் ஏதாவது இருக்கா... 'வெஸ்ட்' ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல கிளார்க்கா இருக்கற, மூணு பேர்ல ஒருத்தருக்குதான் வேலை நல்லா தெரியும்; அதனால, அவருக்கு ஏகப்பட்ட கிராக்கி''''டிமாண்ட்' வச்சு, வாங்குறாரு. ஏகப்பட்ட புகார் போயிருக்கு. இருந்தாலும், அவர் மேல நடவடிக்கை இல்லியாம்...'' என்ற சித்ரா, ''உணவு கலப்பட துறைக்காரங்க, கொஞ்ச நாளா, அடக்கி வாசிக்கிறாங்களே... என்னாச்சு...'' என, நோண்டினாள்.''அதுவா, குட்கா, புகையிலை அயிட்டங்களை பறிமுதல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. மேலிடத்துல இருந்து 'பிரஷர்' வந்திருக்கு; ஒரு கட்டத்துல, போன்ல கூப்பிட்டு, 'லெப்ட்-ரைட்' வாங்கிட்டாங்களாம். 'லேடி' அதிகாரியாச்சே; ரொம்பவே பயந்து போயிருக்காங்க...'' என, பரிதாபப்பட்டாள் மித்ரா.''என்னப்பா, அரசாங்க அலுவலகத்த பத்தியே சொல்லிக்கிட்டு இருக்கே. எலக்சன் வரப்போகுது. கூட்டணி, பேச்சுன்னு அரசியல் களம் சூடா இருக்கு... லோக்கல் விஷயம் ஏதுமே சொல்லலையே...'' என, அலுத்துக் கொண்டாள் சித்ரா.அதற்கு மித்ரா, ''பொறுமையா இருக்கா... விஷயம் இல்லாம இருக்குமா? நம்மூர்ல தி.மு.க., களமிறங்க தயங்குது; கூட்டணியில, மா.கம்யூ., போட்டியிடுறதுக்கு வாய்ப்பு அதிகமா இருக்கு. அ.தி.மு.க., கூட்டணியில, பா.ஜ., கேட்டுக்கிட்டு இருக்கு. யாரை நிறுத்தினாலும் ஜெயிக்கிற தொகுதியை தாரைவார்க்கிறதுக்கு அ.தி.மு.க., தயங்குது. மத்த கட்சிக்காரங்களுக்கு, பெரிசா ஓட்டு வங்கி இல்லை; நின்னாலும், ஓட்டுகளை பிரிப்பாங்களே ஒழிய... ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பில்லை...'' என, மித்ரா சொல்லிக்கொண்டே, 'டிவியை, 'ஆன்' செய்தாள்.வேட்டி விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதைப்பார்த்த சித்ரா, ''கதர் வாரியத்திலும் ஏகப்பட்ட முறைகேடு நடக்குது...'' என, அங்கலாய்த்தாள்.''ஆமாக்கா... டவுன்ஹால்ல கதர்வாரிய கடை இருக்கு. இங்க, எவ்வளவு ரூபாய்க்கு பொருள் வாங்குனாலும், பாதி தொகைக்குதான், 'பில்' கொடுக்குறாங்க. யாராவது கேட்டா, வேணாம்னா, 'பில்' கேட்டு வாங்கிக்குங்க... நாங்களா தரமாட்டோம்னு அங்க இருக்கற சூபர்வைசர், வாடிக்கையாளர்க மேல எரிஞ்சு விழுறாரு. என்ன அநியாயமா இருக்கு... ஏதோ பிரைவேட் கடை ஓனராட்டம் ஆக்ட் பண்றாராம்.''வாடிக்கையாளர்கள் வாங்கும் பாதி தொகைக்கு, ரசீது கொடுத்துட்டு மீதித்தொகையை எந்த கணக்குல யாருக்கு 'ஒதுக்குறாங்க'ன்னு தெரியலை. அங்க விக்கிற பொருட்களோட தரத்திலும் சந்தேகமா இருக்கு. அதனால, 'ஸ்டாக் லிஸ்ட்'டை ஆய்வு செய்யணும்; இதுவரைக்கும் எவ்வளவு ரூபாய்க்கு வித்துருக்காங்க; வங்கி கணக்குல எவ்வளவு பணம் வரவு வச்சிருக்காங்க; பணம் சரியா இருக்கான்னு 'செக்' செஞ்சா, ஏகப்பட்ட அலுவலர்கள் சிக்குவாங்க...'' என, புட்டு புட்டு வைத்தாள் சித்ரா.அப்போது, 'டிவி' யில், காஷ்மீர் தாக்குதல் சம்பந்தமான செய்தி ஒளிபரப்பாகியது; இருவரும், அதில் மூழ்கினர்.ரூரல் ஏரியால, 'கள்' விற்பனை அமோகமா நடக்குற மாதிரி, சீட்டாட்டமும் நடக்குது. கோவில்பாளையம் 'லிமிட்'டுல, சரவணம்பட்டி பக்கத்துல, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வோட ரத்த சொந்தம், 'கிளப்' நடத்துறாரு. ஸ்டேஷன்ல இருந்து எஸ்.பி., ஆபீஸ் வரைக்கும், மாசம் தவறாம 'பங்கு' போயிடுது. ஒரு நாளைக்கு, ரூ.15 லட்சம் வரை பணம் புழங்குது; வாரக்கடைசியில, ரூ.30 லட்சம் வரைக்கும், 'கரன்சி' விளையாடுது. கரெக்டா கப்பம் கட்டுறதுனால, போலீஸ்காரங்க கண்டுக்கறதில்லையாம்''

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X