அடித்தால் நடுங்கும் கோழை : மசூத் அசார் பற்றி அதிகாரி தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அடித்தால் நடுங்கும் கோழை : மசூத் அசார் பற்றி அதிகாரி தகவல்

Added : பிப் 19, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 அடித்தால் நடுங்கும் கோழை :  மசூத் அசார் பற்றி அதிகாரி தகவல்

புதுடில்லி: 'கன்னத்தில் ஒரே ஒரு அறை விட்டதற்கே, பல உண்மைகளை கொட்டும் கோழை, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார்' என, விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், சமீபத்தில் நடத்திய தற்கொலை தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாரை, 1994ல், காஷ்மீரில் ராணுவம் கைது செய்து, கோட் பல்வால் சிறையில் அடைத்தது.அங்கு, அவனிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மசூத் அசாரிடம், காஷ்மீர் உளவு பிரிவின் தலைவராக அப்போது பதவியில் இருந்த, அவினாஷ் மோஹானனே தீவிர விசாரணை நடத்தினார். பின், வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து அவர் ஓய்வு பெற்றார்.மசூத் அசார் குறித்து, அவினாஷ் மோஷானனே, கூறியதாவது:மசூத் அசாரை சிறையில் சந்தித்து பல மணி நேரம் விசாரணை நடத்தினேன். அவன், கையாள்வதற்கு எளிதானவன்; அடித்தால், நடுங்கும் கோழை; நிறைய தகவல்களை சொன்னான்.ராணுவ அதிகாரி ஒருவர், அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டதும், பயத்தில் தகவல்களை கொட்டியபடி இருந்தான். அப்போது தான், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பற்றிய நிறைய தகவல்கள், உளவுத் துறைக்கு கிடைத்தன.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த, 1999ல், பயணியர் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் பேரம் பேசினர். நுாற்றுக்கணக்கான பயணியரை காப்பாற்றுவதற்காக, அப்போது, மசூத் அசாரை, அரசு விடுவித்தது.



வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
20-பிப்-201918:49:29 IST Report Abuse
ravichandran சாணக்கியன் சொல் - பகைவன் , தீ , கடன் இம்மூன்றும் மிச்சம் வைக்கக்கூடாது அழித்துவிட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-பிப்-201909:23:42 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆனால் நம்மை அடித்து நம்மை புலம்பவைத்து விட்டானே
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
20-பிப்-201904:23:32 IST Report Abuse
 nicolethomson இந்த பாலைவன காட்டுமிராண்டிக்காக இங்கே சில சிறுபுத்தியினர் இந்திய வரி காசை உண்டுவிட்டு, அந்த நாட்டுக்கு என்று உயிர் வாழுதுங்க, சானியா மிர்சாவாவது அபிஷியல் கல்யாணம் கட்டிக்கிச்சு , ஆனா இந்தியாவிலோ? பாலைவன நாட்டில் இருந்து நிறைய பேரு டூர் வந்துட்டு போனாங்க போல , வெறும் ஹைதராபாத்தில் மாத்திரம் இந்த மாதிரி நிக்கா நடக்குதுன்னு படிச்சிருக்கேன், தமிழகத்திலுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X