பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சிகளின் அந்தஸ்து உயர்வு

Added : பிப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

அவிநாசி: பேரூராட்சிகள் அந்தஸ்து உயர்ந்துள்ளதால், செயல் அலுவலர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், 569 பேரூராட்சிகள் உள்ளன. ஆண்டு வருமானம், 2 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள பேரூராட்சி, சிறப்பு நிலை, 2 கோடி ரூபாய்க்கு குறைவான வருமானமுள்ள பேரூராட்சி, தேர்வு நிலை என அழைக்கப்படுகிறது.இதுதவிர, 1 கோடி ரூபாய்க்கு அதிகமுள்ள பேரூராட்சி, முதல் நிலை, 1 கோடி ரூபாய்க்கு குறைவாக வருவாயுள்ள பேரூராட்சி, இரண்டாம் நிலை அந்தஸ்து பெற்றுள்ளன.இதன்படி, மாநிலத்தில், 12 சிறப்பு நிலை, 222 தேர்வு நிலை, 214 முதல் நிலை, 80 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளின் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளதால், அவற்றின் அந்தஸ்தும் உயர்ந்து உள்ளது. 64 பேரூராட்சிகள், சிறப்பு நிலை அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளன.தேர்வு நிலை, முதல் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள பல பேரூராட்சிகளின் அந்தஸ்தும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்தந்த அந்துஸ்துக்கு ஏற்ற, செயல் அலுவலர்கள், இதுவரை பணி அமர்த்தப்படவில்லை.மேலும், பல பேரூராட்சிகளில், செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. லோக்சபா தேர்தல் வர இருப்பதால், காலியாக இருந்த செயல் அலுவலர் பணியிடங்கள், பதவி உயர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டுவருகின்றன.பேரூராட்சிகளின் அந்தஸ்துக்கு ஏற்ப, பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் மூலம், செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம், அனைத்து பேரூராட்சிகளிலும், செயல் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-பிப்-201905:52:17 IST Report Abuse
Bhaskaran அரசுக்கு செலவுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X