'மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்'

Added : பிப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்'

கோவை: ''காஷ்மீரில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்திய தாக்குதலை, மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்,'' என, கோவை, சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லுாரி இரண்டாவது, 'கமாண்டன்ட்' சுசாந்த் பிரதான் கூறினார்.காஷ்மீரில் பலியான, சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோவை துடியலுார் அருகே, ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 'கமாண்டன்ட்' சுசாந்த் பிரதான் பேசியதாவது:உள்நாட்டு பாதுகாப்பில், சி.ஆர்.பி.எப்., மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. மொத்தம், 246 பட்டாலியன்கள் உள்ளன; 3 லட்சம் வீரர்கள் பணியில் உள்ளனர். இவர்களில், 50 ஆயிரம் பேர், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலும், 55 ஆயிரம் பேர், வடகிழக்கு மாநிலங்களிலும் பணியில் உள்ளனர்.காஷ்மீரில் நடந்த தாக்குதல், பிரதான சாலையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் ராணுவம், சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட பல்வேறு வகையான வீரர்கள் பயன்படுத்தும் ரோடு அது.விடுமுறை முடிந்து, ஊர் திரும்பும் வீரர்கள், ஊருக்குச் செல்லும் வீரர்கள் என, ராணுவ வண்டிகளின் நடமாட்டம் எப்போதும் இருக்கும் பகுதி. அதை பயன்படுத்தி, தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இப்போது நடத்திய தாக்குதலை, மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்.இவ்வாறு, அவர் பேசினார்.



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201908:54:40 IST Report Abuse
Srinivasan Kannaiya இது அப்பிடியே அனல் பூத்த நெருப்பாக இருக்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X