பொது செய்தி

தமிழ்நாடு

இயங்கத் துவங்கின பட்டாசு ஆலைகள்

Added : பிப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இயங்கத் துவங்கின பட்டாசு ஆலைகள்

சிவகாசி: உச்சநீதி மன்ற தீர்ப்பால் முடங்கிய பட்டாசு ஆலைகளில் 50 சதவீத ஆலைகள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன.சிவகாசி பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் 209 டி.ஆர்.ஓ., உரிமம் பெற்றவை. மற்றவை நாக்பூர், சென்னை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் பெற்றவை.சரவெடி தயாரிக்க கூடாது, பேரியம் நைட்ரேட் பயன்படுத்த கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்ததால் சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகள் கடந்த நவ., 12 முதல் இயங்காது முடங்கின.தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளின்படி பட்டாசு ஆலைகள் இயங்க டிச., 24 ல் கலெக்டர் சிவஞானம் அனுமதியளித்தார்.இதையடுத்து சாத்துார், வெம்பக்கோட்டை பகுதியில் டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற சில ஆலைகள் உற்பத்தியை துவக்கின. ஆனால் நாக்பூர் மற்றும் சென்னை உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் இயங்கவில்லை.மீண்டும் இயக்கம்பட்டாசு தயாரிப்பில் 75 சதவீதம் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது. கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வாணம் போன்றவற்றிற்கு பேரியம்நைட்ரேட் முக்கியம். அதற்கு தடை தொடரும் நிலையில் நேற்று முதல் டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற மேலும் பல பட்டாசு ஆலைகள் இயங்கத் துவங்கின. எம்.புதுப்பட்டி பகுதியில் 24 ஆலைகள் உற்பத்தியை துவக்கின. நாக்பூர் மற்றும் சென்னை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை உரிமம் பெற்ற சில தொழிற்சாலைகளும் இயங்கின. வேலையிழந்து தவித்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தீர்ப்பு சாதகமாகும்கடந்த 100 நாட்களாக உச்சநீதிமன்ற உத்தரவால் பட்டாசு ஆலைகள் இயங்கவில்லை. 50 சதவீத பட்டாசு ஆலைகள் இயங்க துவங்கி உள்ளது. நாளை முதல் மீதமுள்ள ஆலைகளும் இயங்க வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பும் பட்டாசுக்கு சாதகமாக வரும் என நம்புகிறோம்.விநாயகமூர்த்தி, தலைவர்பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் மீனம்பட்டி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-பிப்-201905:05:29 IST Report Abuse
Bhaskaran ஏழை மக்களின் துயரம் தீரணும் நீதிமன்றம் இவர்களுக்கு ஆதரவாக தீர்ப்புவழங்கினாள் மகிழ்ச்சியே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X