பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மானிய டீசல் அளவு குறைப்பு

Added : பிப் 19, 2019
Advertisement

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவருக்கு மாநில அரசு வழங்கும் மானிய டீசல் அளவை குறைத்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு விசைப்படகுகளில் மீன்பிடிக்கும் மீனவர்கள் நலன் கருதி ஒரு படகிற்கு மாதம் மானிய விலையில் 1800 லிட்டர் வழங்குகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள 830 விசைப்படகிற்கு 3 அரசு, 2 தனியார் டீசல் பங்குகளில் மானிய டீசல் வழங்கப்படுகிறது.ராமேஸ்வரத்தில் தமிழக மீன்துறை கூட்டுறவு கூட்டமைப்பு (டாப்கோபெட்) சார்பில் இயங்கும் ஒரு பம்பில் ஜன.,ல் 1800 லிட்டருக்கு 1650 லிட்டர் மட்டுமே வழங்கினர். இதே போல் இம்மாதம் (பிப்.,) ஓதுக்கீட்டிலும் 1650 லிட்டர் தான் வழங்க முடியும் என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மீனவர்களுக்க ஒரு படகிற்கு தலா 2100 ரூபாய் இழப்பு ஏற்பட்டது.ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் யுவராஜ் கூறுகையில், டாப்கோபெட் பம்பில் மானிய டீசல் பிடிக்க புதியதாக 19 படகுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கான ஒதுக்கீடு ஜன.,ல் வராததால் மீனவர்களுக்கு முழு டீசல் வழங்க முடியாமல் 150 லிட்டர் குறைந்தது. இம்மாதம் முழு டீசலும் வழங்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X