அமைதிக்கான நோபல் பரிசு; டிரம்ப் பெயரை பரிந்துரைத்தது ஜப்பான்| Dinamalar

அமைதிக்கான நோபல் பரிசு; டிரம்ப் பெயரை பரிந்துரைத்தது ஜப்பான்

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (14)
Share
டோக்கியோ: வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் மற்றும் அந்நாட்டில் நிலவிய பதற்றமான சூழலை பேச்சுவார்த்தை மூலம் குறைத்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஜப்பான் பரிந்துரை செய்துள்ளது.வடகொரியா, அணு ஆயுதம் மூலம் கிழக்கு ஆசியாவில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றமான
நோபல் பரிசு,டிரம்ப்,பரிந்துரை,ஜப்பான்

டோக்கியோ: வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் மற்றும் அந்நாட்டில் நிலவிய பதற்றமான சூழலை பேச்சுவார்த்தை மூலம் குறைத்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஜப்பான் பரிந்துரை செய்துள்ளது.

வடகொரியா, அணு ஆயுதம் மூலம் கிழக்கு ஆசியாவில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது.


latest tamil news


இதனால் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு, அமெரிக்கா கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று, டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார். இதனை வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X