பொது செய்தி

இந்தியா

கவர்னர்- முதல்வர் பேச்சுவார்த்தை : முடிவுக்கு வந்தது போராட்டம்

Added : பிப் 19, 2019
Advertisement

புதுச்சேரி,: புதுச்சேரி கவர்னர்- முதல்வர் பேச்சுவார்த்தையால் ராஜ்நிவாஸ் முன்பு 6 நாட்களாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வருகிறது. புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகளை கண்டித்தும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அனுமதி அளிக்க கோரியும் கடந்த 13ம் தேதி முதல் முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ராஜ்நிவாஸ் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டம் துவங்கிய மறுநாளே டில்லி புறப்பட்ட கவர்னர் கிரண்பேடி 21ம் தேதி திரும்ப திட்டமிருந்தார். இதனால் கவர்னர் ஊர் திரும்பும் வரையில் போராட்டம் தொடரும் என முதல்வர் அறிவித்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. ஐந்தாம் நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி டில்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று முன்தினம் (17 ம் தேதி) அவசர அவசரமாக புதுச்சேரி திரும்பினார்.அன்றைய தினம் மாலை 6:00 மணிக்கு முதல்வர் நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்தார். கவர்னருடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்த முதல்வர் நாராயணசாமி, 'அமைச்சர்கள், தலைமை செயலர் உள்ளிட்ட துறை செயலர்கள், துறைத் தலைவர்கள், முதல்வரின் பாராளுமன்ற செயலர், அரசு கொறடா ஆகியோரை பேச்சுவார்த்தையில் இடம் பெற அனுமதிக்க வேண்டும். கவர்னரின் ஆலோசகர் பங்கேற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதித்தார்.அதனை கவர்னர் நிராகரித்ததால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. 6ம் நாளாக நேற்றும் பேராட்டம் நீடித்தது. இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு கவர்னர் கிரண்பேடி மீண்டும் அழைப்பு விடுத்தார். நிபந்தனைகள் தளர்த்தப்படவில்லை என்றாலும் மக்கள் நலன் கருதி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்த முதல்வர், கவர்னருடனான பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தார். அதையடுத்து நேற்று மாலை 5:05 மணியளவில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் ராஜ்நிவாசிற்குள் சென்றனர். அங்கு கவர்னர் கிரண்பேடி தலைமையில் பேச்சுவார்த்தை துவங்கியது. தலைமை செயலர் அஸ்வனிகுமார், நிதிச்செயலர் கந்தவேலு உள்ளிட்ட துறை செயலர்கள் பங்கேற்றனர்.இரவு 9:30 வரையில் நான்கரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. 9:45 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறும்போது, 'கவர்னருடன் நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசித்த பிறகு முடிவை தெரிவிப்பதாக கூறினார்.இதை தொடர்ந்து ராஜ்நிவாஸ் எதிரில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை அழைத்துக்கொண்டு சட்டசபை கமிட்டி ஹாலுக்கு முதல்வர் வந்தார். அங்கு பூட்டிய அறையில் ஆலோசனை நடந்தது. பின், இரவு 11:15 மணிக்கு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நாராயணசாமி அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X