அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமித்ஷா இன்று சென்னை வருகை; கூட்டணி முடிவு அறிவிப்பு?

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
அமித்ஷா,சென்னை,வருகை,கூட்டணி_முடிவு,அறிவிப்பு?

சென்னை: தமிழகத்தில், கூட்டணியை முடிவு செய்து அறிவிப்பதற்காக, பா.ஜ., தேசிய தலைவர், அமித்ஷா, இன்று(பிப்.,19) சென்னை வர உள்ள, தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, பல கட்டமாக ரகசிய பேச்சு நடந்தது. தொகுதி எண்ணிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ., பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான, பியுஷ் கோயல், 14ம் தேதி இரவு, சென்னை வந்தார்; கூட்டணியை உறுதிப்படுத்தி சென்றார்.

இந்நிலையில், இன்று, பா.ஜ., தேசிய தலைவர், அமித்ஷா, சென்னை வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அவர், முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர், பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய பின், கூட்டணி தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என, கூறப்படுகிறது.


latest tamil news



முதல்வர், நேற்று தலைமைச் செயலகம் வரவில்லை. அவரது வீட்டிற்கு, மூத்த அமைச்சர்கள் சென்றனர். கூட்டணி குறித்து ஆலோசித்துள்ளனர். பின், மாலையிலும், முதல்வர் வீட்டில், ஆலோசனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
19-பிப்-201910:10:29 IST Report Abuse
நக்கீரன் எப்படியோ தேர்தல் வெற்றியை மட்டும் மனதில் வைத்து அவசரப்பட்டு பிஜேபி சேருகிறது. இதனால், பிஜேபி மீது இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும். அவர்கள் மீது கோபம் இன்னும் அதிகமாகும். நல்லவர்கள் செய்யும் தப்பு இதுதான். குறுகிய கால வெற்றியை மனதில் வைத்து சேர்ந்து விடுகிறார்கள். அப்புறம் இனி மக்கள் எப்படி மதிப்பார்கள்? மோடிக்காக ஓட்டுப்போட வேண்டும் என்று நினைப்பவர்களும் ஓட்டுப்போட மாட்டார்கள். எப்படியும் தோல்வி உறுதி.
Rate this:
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
19-பிப்-201909:50:28 IST Report Abuse
தமிழ்மைந்தன் "" தமிழர்கள்"" இந்த வார்த்தையை அழிக்க புறப்பட்ட தெலுங்கு இனத்தின் கடைசி வாரிசே ஊழல்தலைவரின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகன் ....இதோ வந்தாச்சு....
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201908:01:57 IST Report Abuse
Srinivasan Kannaiya விளங்காதவர்கள் நட்டாற்றில் இறங்கப்போகிறார்கள்
Rate this:
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
19-பிப்-201909:25:45 IST Report Abuse
Swaminathan Nathநாட்டு பற்றுள்ள இந்தியர்கள் மோடியை விரும்புகின்றனர், மக்கள் நல்ல தீர்ப்பு தருவார்கள்,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X