பொது செய்தி

தமிழ்நாடு

வீரர்கள் குடும்பத்திற்கு கூலி தொழிலாளி நிதி

Added : பிப் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
வீரர்கள் குடும்பத்திற்கு கூலி தொழிலாளி நிதி

தேனி : காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு, தேனி மாவட்ட கூலித்தொழிலாளி, 1,000 ரூபாயை, கலெக்டரிடம் வழங்கினார்.

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில், பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த, சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்பத்திற்கு, பொதுமக்கள் நிதி உதவி செய்ய, உள்துறை அமைச்சகம் சார்பில், www.bharatkeveer.gov.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக பலரும் உதவுகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம், சருத்துபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொன்னையன், 57, என்பவர், கலெக்டர் பல்லவி பல்தேவிடம், 1,000 ரூபாயை நேற்று வழங்கினார்.

பொன்னையன் கூறியதாவது: காஷ்மீரில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தியால், வேதனை அடைந்தேன். நானும், மனைவியும் மூன்று நாட்களாக துாங்கவில்லை. வீரர்கள் குடும்பத்திற்கு முடிந்த உதவியை செய்ய நினைத்தோம். கூலி வேலை செய்து சேர்த்த, 1,000 ரூபாயை நிதியாக கொடுத்துள்ளோம். முடிந்த உதவி செய்ததில், மனம் திருப்தி அடைகிறது. என்னைப் போலவே, அனைவரும் இயன்ற உதவியை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-பிப்-201911:56:41 IST Report Abuse
ருத்ரா எண்ணம் தான் பெரிது. வாழ்த்துக்களுடன் மரியாதை கலந்த வணக்கம் ஐயா
Rate this:
Share this comment
Cancel
Malaichamy - THENI,இந்தியா
19-பிப்-201911:47:03 IST Report Abuse
Malaichamy தலை வணங்குகிறேன்... தலைவா....
Rate this:
Share this comment
Cancel
Vaasagar - -,இந்தியா
19-பிப்-201907:57:12 IST Report Abuse
Vaasagar உங்களை வணங்குகிறேன், ஐயா கூலி வேலை செய்தாலும் தர்ம சிந்தனையோடு இருக்கிறார்களே, இவர்கள் தான் பாரததேவியின் தவப்புதல்வர்கள்.மற்றபடி அரசியல்வாதிகளென்று சொல்லித்திரியும், அடுத்தவன் குடி கெடுத்துத் தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் பதர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X