கல்வி தரம் மீது விளையாடாதீர்கள்; சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : 'மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது. கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும்' என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லுாரியில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சோதனை நடத்த சமீபத்தில் சென்றனர். அப்போது கல்லுாரிக்குள் அவர்களை அனுமதிக்க
கல்வி_தரம்,விளையாடாதீர்கள்,Supreme Court,சுப்ரீம் கோர்ட்,எச்சரிக்கை

புதுடில்லி : 'மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது. கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும்' என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லுாரியில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சோதனை நடத்த சமீபத்தில் சென்றனர். அப்போது கல்லுாரிக்குள் அவர்களை அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து அக்கல்லுாரி மீது இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news




நீதிபதிகள் உத்தரவு:

கல்வி என்பது சிலருக்கு பணம் சம்பாதிக்கும் தொழிலாக இருக்கலாம். ஆனால் அதன் தரத்தை மட்டுமே நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது. கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
19-பிப்-201913:02:19 IST Report Abuse
Girija சின்ன விஷயத்திற்கு எல்லாம் சுப்ரீம் கோர்ட் வரை ஏன் வரவேண்டும்? கொல்கொத்தாவில் சிபிஐ கைது தெளிவான தீர்ப்பு இதுவரை இல்லை. எம் பி ஆக இருந்து எம் எல் எ ஆன பிறகும் எம் பி பதவியை ராஜினாமா செய்யாமல் பாரளுமன்றத்தில் வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களித்த கிரிதர் கோமங்கோ வால் வாஜ்பாய் அரசாங்கம் கவிழ்ந்தது . இன்றுவரை கூட இவற்ற்றை தடுக்க சட்டம் கொண்டுவரப்படவில்லை சுப்ரீம் கோர்ட்டும் தானாக முன் வந்து அரசு மீது வழக்கு போடவில்லை
Rate this:
Cancel
19-பிப்-201912:37:50 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் , கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னால் மட்டுமே மட்டும் போதுமா , வேறு எந்த கல்லூரியும் இனிமேல் சோதனை செய்ய வருபவர்களை தடுக்காத வண்ணம் இந்த கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள் அல்லது நூறு கோடி அபராதம் விதியுங்கள்.
Rate this:
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
19-பிப்-201911:20:28 IST Report Abuse
Enrum anbudan தமிழ் நாட்டின் சட்டக்கல்லூரியில் போய் பாருங்கள் இட ஒதுக்கீடு தாண்டவமாடிக் கொண்டு இருக்கின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X