புல்வாமா தாக்குதல்: ராணுவத்தின் அடுத்த வேட்டை யார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புல்வாமா தாக்குதல்: ராணுவத்தின் அடுத்த வேட்டை யார்

Added : பிப் 19, 2019
Advertisement

புதுடில்லி: காஷ்மீரில் புல்வாமாவில் நமது ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலை படை தாக்குதலுக்கு காரணமாவர்கள் யார் என ராணுவம் கண்டுபிடித்து விட்டது. அவர்களை வேட்டையாடும் பணி இன்னும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே பாக்.,கில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜெ.இ.எம்.,) இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதை இப்போது நமது ராணுவமும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த அமைப்பின் பாக்.,கில் உள்ள கைபர் பகுதியின் கமாண்டராக இயங்கி வரும் நுாசுர் மவுல்வி வாதா குஹாசி என்பவன் முக்கியமான காரணம் என ராணுவம் கண்டுபிடித்து உள்ளது.குஹாஷி தான், ஜெ.இ.எம்., இயக்கத்தை சேர்ந்த காஸி என்பவனிடம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தும் பொறுப்பை ஒப்படைத்துள்ளான். (காஸி நேற்று காலை நடந்த ராணுவ வேட்டையில் கொல்லப்பட்டான்).காட்டை விட்டு நாட்டுக்குள்ராணுவத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பகிரப்படுகிறது. ராணுவம் தாக்குதல் நடத்தும் என அஞ்சி காடுகளுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பலர், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தினாலும் நடத்தும் என அஞ்சி எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.காஸி யார்காஸி பாக்.,கில் உள்ள கைபர் பகுதியை சேர்ந்தவன். அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கானும் அதே பகுதியை சேர்ந்தவர் தான். காஸிக்கும் லஷ்கர் இ தொய்பா இயக்க தலைவர் ஹபீஸ் சயீதுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது.காஸிக்கு வெடிகுண்டு செய்யும் பயிற்சியை குஹாஷியே அளித்துள்ளான். பாக்., பழங்குடி பகுதிகளில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய அனுபவம் உள்ளவன். பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக மாணவர்களை திரட்ட முயன்றவன்.ஆதில் அகமது தர் என்பவனுக்கு தற்கொலை படை தாக்குதல் நடத்த தேவையான பயிற்சி, வெடிமருந்து கொடுத்தது காஸி தான். ஆதில், முன்பு அல் கொய்தாவில் இயங்கி விட்டு, பின்பு ஜெ.இ.எம்.,முக்கு மாறியவன்.குஹாஷிக்கும் காஸிக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபன்களுடன் தொடர்பு இருந்தாலும், இவர்களை கட்டுப்படுத்துவது பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தான்.பாக்., -ஆப்கன்ஆப்கனில் அமைதி ஏற்பட அமெரிக்க தலைமையில் அங்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் பின்னணியில் தான் காஷ்மீரில் தாக்குதல் நடந்துள்ளது. ஆப்கனில் ஏராளமான முதலீடுகளை செய்து பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இதையும் சீர்குலைக்கும் விதமாகத் தான் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.ஆப்கனில் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்களுடன் பாக்., ராணுவ துணையோடு அமெரிக்கா பேசி வருகிறது. இந்நிலையில் ஆப்கனில் இருந்த பயங்கரவாதம் காஷ்மீருக்கு மாறி விடக்கூடாது என்ற அச்சமும் நிலவுகிறது.தற்கொலை படை ஸ்டைல்தற்கொலை படை தாக்குதல் நடத்துவது தலிபன் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்., வழக்கம். புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலும் இந்த பாணியில் தான் நடந்துள்ளது.காஷ்மீரில் பணிபுரிந்த ஒரு ராணுவ அதிகாரி கூறும்போது, ''இது ஒரு கவலை அளிக்கும் விஷயம். வெடிமருந்தை நிரப்பிய வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் மோத வைக்க முடியும். அதை முன் கூட்டியே அறிந்துகொள்வது கடினம்'' என்றார்.சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை உள்ளூர் ஆட்கள் மூலம் வாங்கி, வெடிமருந்து தயாரிப்பது தான் பொதுவான வழக்கம். ஆனால், புல்வாமா தாக்குதலில், அனைத்து உதவிகளையும் பாக்.,கில் உள்ள ஜெ.இ.எம்., செய்து தந்துள்ளது.தற்கொலை படை தாக்குதல் நடத்துவோருக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டு மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் காஷ்மீரில் பல பயங்கரவாதிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர்.ஜெ.இ.எம்., இயங்குவது எப்படி ஜெ.இ.எம்., முழுக்க முழுக்க பாக்.,கில் இருந்து இயங்குகிறது. தலைவர் மசூத் அசார். 1999ல் கந்தகார் விமான கடத்தலின் போது, பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக ஜம்மு சிறையில் இருந்து அசார் விடுவிக்கப்பட்டான்.2016, ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படை முகாம் மீதும், 2016ல் உரி ராணுவ முகாம் மீதும் தாக்குதல் நடத்தியது ஜெ.இ.எம்., தான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X