பொது செய்தி

தமிழ்நாடு

சம்பள உயர்வு கோரி போராட ரேஷன் பணியாளர்கள் முடிவு

Added : பிப் 19, 2019
Advertisement

மதுரை: சம்பள உயர்வு, மருத்துவப்படி குறித்து நிபுணர் குழு அளித்த அறிக்கையை வெளியிடாமல் அரசு கால தாமதம் செய்வதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.மாநிலத்தில் கூட்டுறவு, நுகர்பொருள்வாணிப கழகம் சார்பில் 34 ஆயிரத்து 764 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ரேஷன்கடைகளில் உணவுப்பொருட்கள் விநியோக முறைகேடுகளை தவிர்க்க பொட்டலங்களாக வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். மருத்துவப்படியை 300 ரூபாயாக வழங்க வேண்டும். பணிவரன்முறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கூடுதல் பதிவாளர் கோவிந்தராஜூ சமரசம் பேசினார். நிபுணர் குழு அமைக்கப்பட்டு சம்பள உயர்வு, பணிவரன் முறை குறித்து அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.மதுரையில் இச்சங்க மாநில பொது செயலாளர் ஜெயசந்திரராஜா கூறியதாவது: நிபுணர் அளித்த அறிக்கையை பரிசீலித்து பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, பணிவரன்முறை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அறிக்கையை வெளியிடாமல் தாமதப்படுத்துவது ஏமாற்றமளிக்கிறது. இதை கண்டித்து முதற்கட்டமாக மார்ச் 1 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அடுத்தகட்ட போராட்டம் குறித்து மாநில செயற்குழு கூட முடிவு செய்யும் என்றார். நிர்வாகிகள் செல்லத்துரை, அருணாச்சலம் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X