எந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு துணை நிற்போம்: சவுதி இளவரசர் சர்ச்சை பேச்சு

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (98)
Advertisement
சவுதி இளவரசர், பாகிஸ்தான், இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: எந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு துணை நிற்போம் என சவுதி இளவரசர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் தள்ளாட்டத்தில் உள்ளது. செலவுக்கு நிதியின்றி அரசுத்துறைகள் தடுமாறி வருகின்றன. இந்நிலையில் சவுதி 6 லட்சம் கோடி டாலர் நிதியை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இதில் 3 லட்சம் கோடியை ஏற்கனவே பாக்கியுள்ள கடனை தள்ளுபடி செய்தும், மீதி 3 லட்சம் கோடியை நிதியுதவியாகவும் வழங்கியது.







இளவரசருக்கு விருது


இதை தொடர்ந்து சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் வந்தார். அங்கு அவருக்கு அதிபர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் நிஷான்-இ-பாகிஸ்தான் விருதை இளவரசருக்கு அதிபர் அரிப் ஆல்வி வழங்கினார்.




Advertisement


விருது பெற்றுக்கொண்ட இளவரசர் பேசியதாவது: பாகிஸ்தானும் சவுதியும் கலாசாரம், மதம் அடிப்படையில் நீண்டகால நண்பர்கள். இரு நாட்டின் ஒற்றுமைக்கும், ஒத்துழைப்பிற்கும் மூத்த தலைவர்கள் பெரும் அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். அந்த பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம். எந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துணை நிற்போம், என்று பேசினார்.





பின்னர் அந்நாட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்திலும் இளவரசர் பேசினார்.


பதட்டத்தை தவிர்க்க முயற்சி


இந்நிலையில் இந்தியாவின் காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல், அதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதட்டமாக சூழல் குறித்து பாகிஸ்தான் தரப்பு இளவரசரிடம் விளக்கியுள்ளது. பின்னர் சவுதி வெளியுறவு அமைச்சர் அடல்அல்ஜுபைரிடம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மம்மூது குரேஷி பிரச்னை குறித்து தெளிவுபடுத்தினார்.





குரேஷி கூறும்போது, பயங்கரவாதிகளால் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க இந்தியா முயற்சிக்கிறது, என கூறினார்.

ஜுபைர் கூறும்போது, இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தை தடுக்க முயற்சித்து வருகிறோம். இந்தியாவுடன் பேச எங்கள் குழு புதுடில்லி செல்ல உள்ளது. அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கிறோம், என்றார்.




பாகிஸ்தானுக்கு ஆதரவாக இளவரசர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அமைதியை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர்களின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



'சாரதியான' பிரதமர்





சவுதி இளவரசருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது வழக்கமான நடைமுறைகளை பாகிஸ்தான் பின்பற்றவில்லை. அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகள் சவுதி அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு செல்லப்பட்டது. இளவரசரின் காரை பிரதமர் இம்ரான் கானே ஓட்டிவந்தார். பாகிஸ்தான் சரித்திரத்தில் பிரதமர், யாருக்கும் கார் ஓட்டியது கிடையாது.

இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில், ''சவுதியில் பணியாற்றும் 25 லட்சம் பாகிஸ்தானியர்களின் சார்பாக வைத்த கோரிக்கையை இளவரசர் ஏற்றுக் கொண்டுள்ளார். எங்கள் மக்களின் மனங்களை இளவரசர் வென்று விட்டார்'' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-பிப்-201903:20:18 IST Report Abuse
meenakshisundaram மதத்தின் பெயரால் மட்டுமே இவர்கள் இணைவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-பிப்-201921:21:57 IST Report Abuse
Cheran Perumal இந்த பணத்தில் பெரும்பகுதி இந்தியாவுக்குள் வரும், தீவிரவாதிகளுக்காக. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள எச்சில் பொறுக்கிகள் இப்போதே ஜொள் விட்டுக்கொண்டிருப்பார்கள், வரப்போகும் பணத்துக்காக.
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-201917:43:23 IST Report Abuse
sura Gopalan The race belongs to the race (dog)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X