இன்ஜி., மாணவர்களை மிரள வைக்கும், 'போர்ட் ரூம்': கண்காணிக்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., மாணவர்களை மிரள வைக்கும், 'போர்ட் ரூம்': கண்காணிக்க உத்தரவு

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (21)
Advertisement

இன்ஜினியரிங் மாணவர்களை மிரள வைக்கும், 'போர்ட் ரூம்' என்ற மர்ம அறை குறித்து, ரகசிய கண்காணிப்பு நடத்த, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.




நாடு முழுவதும் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரத்தில் செயல்படுகின்றன. அங்கீகாரம் பெறும் கல்லுாரிகள், தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்துடன், அண்ணா பல்கலை பாட திட்டத்தில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் வழியாகவும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக இட ஒதுக்கீட்டிலும், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.






சரியாக பேராசிரியர்கள் இல்லாமை, பாடங்களை முறையாக நடத்தாதது, வசூலித்த தேர்வு கட்டணத்தை, பல்கலைக்கு செலுத்தாதது என, கல்லுாரிகள் மீது, பல புகார்கள் எழுந்துள்ளன. சமீபகாலமாக, இன்ஜி., கல்லுாரிகளில் செயல்படும், 'போர்ட் ரூம்' மாணவர்களை மிரள வைத்துள்ளது.அதாவது, சில இன்ஜி., கல்லுாரிகளின் கேன்டீனில் உணவு பொருளுக்கு அதிக விலை வைப்பது, தேர்வு எழுத கூடுதல் கட்டணம் கேட்பது, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, 'பிரேக்கேஜ்' என்ற பெயரில், திடீர் அபராதம் விதிப்பது போன்ற வசூல் வேட்டைகள், மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அபராதத்துக்கு எதிராகவும், விடுதிகளில் வசதி குறைவு பற்றியும் கேள்வி எழுப்பும் மாணவர்கள், கல்லுாரிகளின், போர்ட் ரூமிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு, சில பேராசிரியர்களும், கல்லுாரி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் வெளியாட்களும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிரட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பயந்து, பல மாணவர்கள், கல்லுாரி படிப்பை பாதியில் விடும் நிலையும் உள்ளது. சமீபத்தில், போர்ட் ரூம் விவகாரத்தை கிளப்பிய மாணவர்களின், ஹால் டிக்கெட்டை பதுக்கி வைத்து, தேர்வுக்கு அனுமதிக்காமல், கல்லுாரிகள் மிட்டியுள்ளன.
இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது: ரஜினி நடித்த, 'சிவாஜி' படத்தில், 'ஆபீஸ் ரூம்' என்ற அறையில் பூட்டி வைத்து, வெளியே தெரியாமல், உதை விழும். அதை போலவே, இன்ஜி., கல்லுாரிகளில், 'போர்ட் ரூம்' உள்ளது. எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவர்களுக்கு, சான்றிதழ் கிடைக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, 'போர்ட் ரூம்' குறித்து, கல்லுாரிகளை ரகசியமாக கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரத்தை, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்பவும், அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

- நமது நிருபர் -





வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-பிப்-201901:41:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரத்தை, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்பவும், அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.// - இதனாலே என்னாகும்? ஏ.ஐ.சி.டி.இ. க்கு லஞ்ச வசூல் அதிகமாகும்.. அவ்வளவு தான்..
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
19-பிப்-201921:23:10 IST Report Abuse
அம்பி ஐயர் சரியாக பேராசிரியர்கள் இல்லாமை, பாடங்களை முறையாக நடத்தாதது, வசூலித்த தேர்வு கட்டணத்தை, பல்கலைக்கு செலுத்தாதது.... இது மட்டுமல்ல.... அரசு கொடுக்கும் TA & DA கொடுக்காமல் ஏமாற்றுவது.... மாணவர்களுக்குத் தர வேண்டிய ஸ்காலர்ஷிப் பணத்தை முழுவதும் கொள்ளையடிப்பது.... கல்வியைத் தொடரமுடியாமல் டிஸ்கண்டின்யூ செய்யும் மாணவர்களிடம் அவர்களது மார்க் ஷீட்டை திருப்பித் தர அதிக அளவில் பணம் கொள்ளையடிப்பது.... பணி புரியும் ஊழியர்களின் மார்க்ஷீட் களை வாங்கி வைத்துக் கொண்டு தராமல் ஏமாற்றுவது (லேட்டஸ்டாக சாஸ்தா கல்லூரி பேராசிரியர் ஞாபகம் வருதா...)குறைந்த அளவில் சம்பளம் வங்கியின் மூலமாகக் கொடுப்பது போல கணக்குக் காட்டிவிட்டு அடுத்த நாளே அதை திருப்பி வாங்கிக் கொள்வது..... அல்லது அட்வான்ஸ் கொடுத்ததாகக் கள்ளக் கணக்கெழுதுவது.... இப்பையாக இன்னமும் பல்வேறு முறைகேடுகள் செய்து கொண்டு தானிருக்கின்றனர்.... அவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது.... ஏனெனில் இப்படிப்பட்ட கல்லூரிகளை நடத்துவது முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள்.... அரசியல் வியாதிகள்..... அவர்களின் பினாமிகள் ..... இவர்கள் தான்.....
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
19-பிப்-201921:16:25 IST Report Abuse
அம்பி ஐயர் எவ்வளவு தான் புகார்கள் வந்தாலும் கல்லூரி நிர்வாகிகளின் “தாராள” மனதாலொன்றும் கண்டு கொள்வதில்லை. சமீபத்தில் தேர்வில் முறைகேடுகள் செய்ததாக சில கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. ஆனால் வழக்கம் போல அக்கல்லூரி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து கல்லா கட்டுகிறார்கள். (உ.ம். செந்தூரான் இன்ஜினியரிங் கல்லூரி, புதுக்கோட்டை. மன நிலை சரியில்லாத / மாற்றுத் திறனாளி மாணவர் அனைத்துப் பாடங்களிலும் முதல் இடமாம்.) கல்வி வியாபாரிகள். பணத்திற்காக கல்வியை மட்டுமல்ல எதை வேண்டுமானாலும் விற்பார்கள். அவர்களுக்குத் தேவை பணம் மட்டுமே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X