காஷ்மீருக்குள் 21 பயங்கரவாதிகள் ஊடுருவல்?

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (8)
Advertisement

புல்வாமா: தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக, கடந்த 2018 டிசம்பரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 21 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.







இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் உறவினரான முகமது உமைர் தலைமையில், பயங்கரவாதிகள் ஊடுரு உள்ளனர். திங்கட்கிழமை(பிப்.,18) காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் , உமைருடன் வந்த கம்ரான் என்ற பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான். பார்லிமென்ட் தாக்குதலில் கைதாகி தூக்கில் போடப்பட்ட அப்சல் குரு மற்றும் மசூத் அசாரின் உறவினரான உஸ்மான் ஹைதீர் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தாக்குதல் நடத்த அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நன்கு பயிற்சி பெற்ற, பயங்கரவாதிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து உள்ளனர். அவர்களிடம் நவீன ஆயுதங்கள் உள்ளன. ஒரு குழுவிற்கு முதாசீர் கானும், மற்றொரு குழுவிற்கு ஷாகீத் பாபாவும் தலைமை ஏற்று உள்ளனர். இதில் ஷாகீத் பாபா என்ற பயங்கரவாதி, புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்துடன் நடந்த என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டான்.


காஷ்மீரில், ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே மோதல் நடந்த இடம்

காஷ்மீரில், ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே மோதல் நடந்த இடம்




காஷ்மீருக்குள் நுழைந்த பயங்கரவாதிகளில் 3 தற்கொலைப்படை பயங்கரவாதிகளும் உள்ளனர். அதில், ஒருவன், அடில் அகமது தர். இவன் தான், கடந்த 14ம் தேதி புல்வாமாவில் தாக்குதல் நடத்தினான். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மற்ற இரண்டு பயங்கரவாதிகளுக்கு, ஜம்மு அல்லது வேறு எங்காவது தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் பெயர்கள், உருது மொழியில் பேப்பரில் எழுதப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பபட்டுள்ளது. இந்தியாவில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள், எளிதில் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்காக, கடந்த 1990 முதல் 1995 வரை பதிவு செய்யப்பட்ட பதிவெண் கொண்ட கார்களை வாங்கியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-பிப்-201915:52:37 IST Report Abuse
Endrum Indian மிக மிக எளிதானது இது. 1) தீவிரவாதிகளை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் விசாரணை ஏதுமின்றி .2) அவர்கள் தங்க , தூங்க , திங்க , செல்ல , சுட யார் யார் உதவினார்களோ அவர்களையும் என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். இதை எல்லாம் செய்யாமல் இருந்தால் இது சிந்துபாத் கதை போல தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு முடிவே கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
19-பிப்-201914:28:08 IST Report Abuse
K.P  SARATHI நமது ராணுவத்தில் அணைத்து மதங்ககளை சேர்ந்த வீரர்கள் உள்ளனரா மேலும் சிலர் நல்ல சம்பளம் இதர சலுகைககக மட்டும் இராணுவத்தில் சேர்கின்றனர் கரணம் வறுமையில் உள்ளவர்கள் மற்றும் வலையில்லாத கிராமத்தில் உள்ளவர்கள் மட்டும் வருகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
19-பிப்-201913:20:18 IST Report Abuse
pattikkaattaan எதிரிகளை கண்டுபிடிக்க முடியாததற்கு முக்கிய காரணம் , உள்ளே இருக்கும் துரோகிகள் .. முதலில் அவர்களை ஒழிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X