பயங்கரவாதிகளுக்கு பாக்., ராணுவம் வெடிமருந்து சப்ளை

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தற்கொலை படை தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.







ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., வாகனத்தின் மீது, தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில், 40 வீரர்கள் உயிர்இழந்தனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த என்ஐஏ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







தடயவியல் துறை நிபுணர்களின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஷ்மீர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை, பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து வாங்கி, சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வந்து உள்ளனர். தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 5 - 7 கி.மீ.,தூரத்திற்குள் வெடிமருந்தை வாகனத்தில் பொருத்தி உள்ளனர். தாக்குதலில் 50 - 70 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டு உள்ளது.
மழை காரணமாக முக்கிய ஆதாரங்கள் அழிந்துவிட்டது. இதனால், இறுதி அறிக்கை அளிக்க சற்று தாமதம் ஏற்படும். இந்த வெடிமருந்தை பொருத்துவதற்காக நவீன பயிற்சி பெற்ற நபர், இந்தியா வந்து சென்றுள்ளார். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.



உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தில், ஒவ்வொரு கிராமிற்கும் கணக்கு இருக்கும். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தில் அப்படி இல்லை. அவர்கள் தான் பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்தை விநியோகம் செய்து வருகின்றனர் என தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.DURAI - trivandrum,இந்தியா
19-பிப்-201914:54:34 IST Report Abuse
N.DURAI அதற்கு இங்கு இருக்கும் முசுலீம் இரண்டாயிரம் போட்டு தள்ளுங்கள் எல்லாம் சரி ஆகி விடும்
Rate this:
Share this comment
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
19-பிப்-201914:30:37 IST Report Abuse
G  Mahalingam இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது வெட்க கேடானது.
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
19-பிப்-201913:54:02 IST Report Abuse
Siva பாகிஸ்தான் தான் support பண்ரான்னு எல்லாருக்கும் தெரியும். இதுல எதுக்கு தனியா ரிப்போர்ட் எல்லாம் ready பண்ணனும்.. எத எடுத்துட்டு போனாலும் அவனுக ஒத்துக்கு போகறதில்ல அப்பரும் என்ன. போரா குறைக்கு சீனா வேற சப்ப கட்டுவாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X