அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (121)
Advertisement

சென்னை: அதிமுக கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 7 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்க உள்ளது.







வரவேற்பு


லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணியை, அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார். இதன் பின்னர், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு, ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வந்தனர். அவர்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.








பேச்சுவார்த்தை

தொடர்ந்து, இரு தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அதிமுக தரப்பில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி ஆகியோரும், பா.ம.க., சார்பில், ராமதாஸ், அன்புமணி, ஜி.கே. மணி ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அதிமுக, பாமக இடையே கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் பின்னர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.






பா.ம.க., ஆதரவு


அப்போது, அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், லோக்சபா தேர்தலில் அதிமுகவும் பாமகவும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பாமகவுக்கு 7 லோக்சபா சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படுகிறது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாம.க., ஆதரவு அளிக்கும் என்றார்.


வெற்றி கூட்டணி

பின்னர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், அதிமுக - பாமக கூட்டணி., மக்கள் நலகூட்டணி, மெகா கூட்டணி. எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே கூட்டணி வைத்துள்ளோம். அந்த கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் வழங்கியுள்ளோம். 40 தொகுதிகளிலும் அதிமுக பாமக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (121)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
easwaran.s - tiruvallur,இந்தியா
21-பிப்-201909:06:36 IST Report Abuse
easwaran.s பணம் பத்தும் செய்யும்
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-பிப்-201919:51:52 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பலர் ஓட்டுக்கு யார் அதிக பணம் கொடுப்பார்களோ அவர்களுக்கு ஓட்டுபோட உள்ளனர். இதுவா ஜனநாயகம். மக்களாட்சி .பணம் படைத்தவனே பதவியை பெறுகிறான். சீட்டையும் பெறுவான்.அதுதான் நடப்பில் உள்ளன.
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
19-பிப்-201919:22:23 IST Report Abuse
Sridhar Rengarajan இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கூட்டணி செமி ஃபைனலில் சொதப்பினாலும் ஃபைனலில் சூப்பராக காய் நகர்த்திவிட்டார்கள். பொதுவாக லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டுக்கிட்டு ரைட்ல திரும்புறது ராமதாஸ் ஸ்டைல். இப்பவும் திமுக கூட்டணிக்கு போறமாதிரி போக்கு காட்டி இறுதியில் அதிமுக கூட்டணியில் மிங்கிளாகிவிட்டார். இதன்முலம் இந்திய அரசியலில் மாஸ்டர் ஆஃப் பல்டி என்றிருந்த ராம்தாஸ் இன்றுமுதல் டாக்டரேட் இன் பல்டி என்று அன்போடு அழைக்கப்படுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X