காஷ்மீர் தாக்குதல் பின்னணியில் பாக்.,உளவு அமைப்பு: இந்திய ராணுவம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் தாக்குதல் பின்னணியில் பாக்.,உளவு அமைப்பு: இந்திய ராணுவம்

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (9)
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த தாக்குதல் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.




ஸ்ரீநகரில் நிருபர்களை சந்தித்த ராணுவ அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் திலான் நிருபர்களிடம் கூறுகையில், ஆயுதம் ஏந்திய காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகளை உடனடியாக பாதுகாப்பு படையிடம் சரண் அடைய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்த வேண்டும்.
யாராவது ஆயுதம் ஏந்தினாலும், அவர்களையும் வீழ்த்துவோம். புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 100 மணி நேரத்திற்குள், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனை சுட்டு கொன்றோம். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் ராணுத்தின் குழந்தை. அதனை பாகிஸ்தான் ராணுவம் தான் கட்டுப்படுத்தி வருகிறது.





புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ, ஜெய்ஷ் இ முகமது அமைப்பிற்கு தொடர்பு உள்ளது. இதில் சந்தேகம் இல்லை. பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மோதல் நடக்கும் இடங்களில் இருந்து பொது மக்கள் விலகி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-பிப்-201902:22:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "காஷ்மீர் தாக்குதல் பின்னணியில் பாக்.,உளவு அமைப்பு" இது சின்னப்பிள்ளைக்கு கூட தெரியும். இதை சொல்றதுக்கு மேன்மை மிகு லெப்டினன்ட் ஜெனரல் தேவையா? இதுக்கு எதிராக, அவங்களை அழிக்க, ஒடுக்க, செயலிழக்க செய்ய, உளவுத்துறையும், ஊடுருவிய உளவுத்துறையும், பாதுகாப்பு படைகளும் என்ன செய்தீர்கள் - சொல்ல வேண்டாம் - செயலில் காட்டுங்கள் ஜீ.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
19-பிப்-201921:10:28 IST Report Abuse
Darmavan ராணுவம் தீவிரவாத எதிர் போருக்கு இஸ்ரேலிடம் பயிற்சிக்கட்டயம்பெறவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201917:31:03 IST Report Abuse
Srinivasan Kannaiya பயங்கரவாதம் பாக்கிஸ்தான் குழந்தைகள் ..அந்த குழந்தைகளே பாக்கின் அழிவிற்கு காரணம் ஆக இருக்கப்போகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X