கர்நாடகாவில் பிரகாஷ்ராஜை கைவிடும் காங்.,

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement
காங்கிரஸ், பிரகாஷ்ராஜ், சுமலதா, கர்நாடகா,

புதுடில்லி: கர்நாடகாவில் வரும் லோக்சபா தேர்தலில் சில நடிகர்கள் போட்டியிட்டால் அவர்களை காங்., ஆதரிக்காது என தெரிகிறது.

கர்நாடகாவில் தேர்தலில் போட்டியிட நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பழம்பெரும் நடிகை சுமலதா அம்பரீஷ் ஆகியோர் தயாராகி வருகின்றனர். இதில் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டிடப் போவதாக அறிவித்துள்ளார். இதே தொகுதியில் போட்டியிட ஏற்கனவே காங்., தலைவர்கள் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர். பெங்களூரு மத்திய தொகுதி பணக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகள் பரவலாக பேசப்படுகிறது.


latest tamil news
ஆம் ஆத்மி ஆதரவு

பிரகாஷ் ராஜூக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் அறிவித்துள்ளன. ஆனால் இது போதாது என்று காங்.,கின் ஆதரவை பிரகாஷ் ராஜ் கேட்டுள்ளார். அதாவது, ‛‛நான் ஏற்கனவே மோடியை எதிர்த்து பேசி வருகிறேன். எனவே, என்னை எதிர்த்து யாரையும் நிறுத்தாதீர்கள்'' என்று காங்.,கை அவர் கேட்டுக்கொள்வதாக அ ர்த்தம். காங்.,கில் சேர்வதற்கு பிரகாஷ் ராஜ் தயாராகத் தான் இருக்கிறார். ஆனால், ‛‛அப்படி சேர்ந்தாலும் நான் 3 மாதங்களுக்கு மேல் கட்சியில் இருக்க மாட்டேன். ஏனென்றால், கட்சியில் இருந்தால் கட்சி சொல்வதைத் தான் கேட்க வேண்டும். ஓட்டளித்த மக்களை கவனிக்க முடியாது '' என்று கூறிவிட்டார்.

காங்., தலைவர்கள் கைவிரிப்பு:பிரகாஷ் ராஜை ஆதரிக்க முடியாது என்று கர்நாடகா காங்., கையை விரித்துவிட்டது. 2014 தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜ., வெறறி பெற்றது. ஆனால், இங்கு சினிமா புகழை வைத்து வெற்றி பெற முடியும் என நம்புகிறார் பிரகாஷ்.


latest tamil news

மாண்டியாவை கேட்கும் சுமலதா

காங்., கட்சியை சேர்ந்த நடிகர் மறைந்த அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான 55 வயதாகும் சுமலதா, மாண்டியாவில் போட்டியிட விரும்புகிறார். இது மதச்சார்பற்ற ஜனதா தளம் வலுவாக உள்ள தொகுதி.சுமலதாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டது காங்., இங்கு தான் அம்பரீஷ் 2 முறை வெற்றி பெற்றார். அதனால் தான் இத்தொகுதியை கேட்கிறார் சுமலதா.இந்த தொகுதியில் தான், தனது மகன் நிகிலை போட்டியிட வைக்க விரும்புகிறார் குமாரசாமி.


என்ன செய்யப் போகிறது காங்.,:

கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகள் பா.ஜ., வசமும், 10 தொகுதிகள் காங்., வசமும், 2 ம.ஜ.த., வசமும் உள்ளன. ‛‛வலுவான மோடி ஆதரவு அலை இருந்தும் நாங்கள் வெற்றி பெற்றோம். எனவே கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு தங்கள் தொகுதிகளை விட்டுக்கொடுக்கக் கூடாது'' என இப்போதுள்ள 10 காங்., எம்.பி.,க்கள் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், உள்ளூர் காங்., தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி, மாண்டியாவையும் ஹசனையும் கேட்கிறது ம.ஜ.த., எனவே, இப்போது பா.ஜ., வசம் உள்ள 16 தொகுதிகளை தங்களுக்குள் பிரித்துக்கொள்வது பற்றி தான் காங்.,கும் ம.ஜ.த.,மும் பேசி வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-பிப்-201916:08:25 IST Report Abuse
இந்தியன் kumar தனி மரம் தோப்பாக முடியாது எம்பீ தேர்தலில் ஒருவர் சுயேட்சையாக வெற்றி பெறுவது கடினம்.
Rate this:
Cancel
partha - chennai,இந்தியா
20-பிப்-201912:32:07 IST Report Abuse
partha Basically a misguided missile
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
20-பிப்-201904:53:58 IST Report Abuse
Murugan பார்க்கலாம்…………….மக்களின் முடிவை…………………..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X