அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - கூட்டணியில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதி

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (86)
Share
Advertisement
சென்னை: அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.அதிமுக - பா.ஜ., கூட்டணி குறித்து இரு கட்சிகள் இடையே 2 ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை நந்தனம் கிரவுன்பிளாசா ஓட்டலில் நடந்தது. இங்கு பியூஷ் கோயலுடன் இ.பி.எஸ்.,

சென்னை: அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.latest tamil newsஅதிமுக - பா.ஜ., கூட்டணி குறித்து இரு கட்சிகள் இடையே 2 ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை நந்தனம் கிரவுன்பிளாசா ஓட்டலில் நடந்தது. இங்கு பியூஷ் கோயலுடன் இ.பி.எஸ்., பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில், பா.ஜ., சார்பில், பியூஷ் கோயல், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் , வானதி சீனிவாசன், அதிமுக சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இன்றைய பேச்சில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது எனவும் யாருக்கு எத்தனை தொகுதிகள் எனவும் முடிவானது. இதன்படி லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


ஓ.பி.எஸ்., - பியூஷ்கோயல் கூட்டாக பேட்டி


பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் பேசுகையில்:2019 பொதுத்தேர்தலில் அதிமுகவும்,. பாஜவும் வெற்றிக்கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதுஎன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பியூஷ்கோயல் நிருபர்களிடம் பேசுகையில்: (தமிழில் வணக்கம் என்று கூறிவிட்டு தொடங்கினார்) பார்லி., தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். இது போல் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பா.ஜ., ஆதரவு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.


latest tamil news


இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் நாற்பதும் நமதே (தமிழில் கூறினார்) என வெற்றி பெறுவோம். கடந்த 2016ல் ஜூலையில் ஜெயலலிதாவை சந்தித்து எரிசக்தி தொடர்பாக பேச்சு நடத்தினேன். இது என்றும் எனது நினைவில் உள்ளது.தற்போது நாங்கள் ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டணியால் ஜெயலலிதா ஆத்மா மகிழ்ச்சி கொள்ளும். இந்த கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elangovan - TN,இந்தியா
20-பிப்-201916:01:21 IST Report Abuse
elangovan It is very bad alliance not good for TN. It is against Ammas principle and never forgive and not accepted the situational selfish alliance . people should throwout this two majer BJP and Congress alliance. PMK and DMDK and BJP all these parties no life in future with peoples heart. Such a big national level party BJP come down to 5 seats in TN is shame its right time that BJP fight alone in TN to prove is vote bank. The great leader AMMa no more and aiadmk volunteers and supporters not to vote for Aiadmk. Seen lots of drama in last two years after ammas death. People to support and think the valuable vote to use TN development not for selfish and corrupted peoples and parties. Seeing this better to support new party MNM to face with this election alone and TN people can make changes to remove corrupted parties in supporting and elect MNM.
Rate this:
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
20-பிப்-201902:09:04 IST Report Abuse
Shroog இந்த கூட்டம் தோற்பது உறுதி. H.ராஜா மற்றும் S.V சேகரும் வந்து இருந்தால், மக்களின் வெறுப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். பொன் ராதாகிருஷ்ணனை பார்க்கும் போது, சிங்கம் எதிரில் வருவதை போல் இருக்கிறது. மக்கள் பிஜேபி மீதும் வெறுப்பில் இருக்கிறார்கள் அதிமுக மீதும் வெறுப்பில் இருக்கிறார்கள். மொத்தத்தில், இந்த கூட்டணி தோற்பது உறுதி. எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் கோல் மால் செய்தால், டெபாசிட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-பிப்-201902:06:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தானம் கொடுத்த மாட்டை பல்லை எண்ணி பாக்கக்கூடாது.. ஆரூர் ரங்கு சொன்னது இப்போ ஞாபகத்துக்கு வருது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X