பாக்.,எடுத்த நடவடிக்கை என்ன?:நிர்மலா சீதாராமன் கேள்வி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாக்.,எடுத்த நடவடிக்கை என்ன?:நிர்மலா சீதாராமன் கேள்வி

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி:பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. நாட்டில் இனிமேல் புல்வாமா சம்பவம் போல் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.




முழு சுதந்திரம்


இது குறித்து அவர் கூறியதாவது: தாக்குதல் நடைபெற்ற பகுதியில் இருந்து கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம்.தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் ஏற்கனவே முழு சுதந்திரம் கொடுத்து உள்ளார். மேலும் புல்வாமா சம்பவம் போல் மீண்டும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.




வீரர்களுக்கு ஊக்கம்


நமது பாதுகாப்பு படைவீரர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் வேலையை செய்ய தயாராக உள்ளனர். இந்திய மக்கள் காட்டிய உணர்வுகளின் பிரதிபலிப்பு அவர்களுக்கு அதிக உந்து சக்தியை அளித்துள்ளது.


பாக்., எடுத்த நடவடிக்கை என்ன?



மும்பை தாக்குதல் சம்பவத்தில் இருந்து இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானிற்கு ஆதாரங்களை அனுப்பி வருகிறது. ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-பிப்-201904:55:09 IST Report Abuse
Mani . V யாரைப் பற்றியும் துளியும் கவலைப்படாமல் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது மாதிரி, இந்தியாவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும். அதை விடுத்து நமுத்துப் போன வடகம் மாதிரி "பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்தது?" என்று வெட்டியாய் பேசி பொழுதை கழிப்பது நல்லதல்ல.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
20-பிப்-201903:14:54 IST Report Abuse
oce தாக்கியவன் மீண்டும் உடனே தாக்கமட்டான். அடிபட்டவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று அடித்தவனுக்கு தெரியும்.எதிரியின் அசந்த நேரம் எது என்று கவனித்துக்கொண்டே இருந்து தாக்குபவன். அவனது அசந்த நேரத்தை நாம் கண்காணித்து திருப்பி அடிக்கவேண்டும். இது தொடர்பாக எந்த அறிக்கைகளையும் வெளியிடக் கூடாது. பாகிஸ்தானியரால் நமது படை வீரர்கள் ஏராளமானவர்கள் இன்னுயிரை விட்டுள்ளனர். அதற்கு கொடுக்கும் மரண அடியில் அவன் தரப்பினரை ஆயிரக்கண்க்கில் கொன்று குவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
20-பிப்-201903:03:36 IST Report Abuse
oce தாக்குதலில் அடிவாங்கியது மட்டுமின்றி அதற்கான ஆதாரங்களையும் தாக்கியவர்களுக்கு கொடுக்கணுமா. என்னய்யா இது அநியாயம். போர்களத்தில் ஒப்பாரி எதற்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X