பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'ஆதார்' தகவல் கசிவு: மக்கள் அதிர்ச்சி

புதுடில்லி:இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின், 'இண்டேன்' எனப்படும்,சமையல், 'காஸ்' சிலிண்டர் வினியோக நிறுவனத்தின், 58 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதார் எண் மற்றும் முகவரிகள் கசிந்துள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

 'ஆதார்', தகவல், கசிவு, மக்கள்,அதிர்ச்சி

இதுகுறித்து, ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த மென்பொருள் ஆராய்ச்சி நிபுணர், பாப்டிஸ்ட் ராபர்ட், இணையதள வலைப் பக்கத்தில் கூறிஉள்ளதாவது:'இண்டேன்' நிறுவனத்தின் டீலர்கள் மற்றும்

வினியோகஸ்தர்களின் வாடிக்கையாளர் களுடைய ஆதார் எண்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட தகவல்களை, 'பாஸ்வேர்டு' இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், இதற்கான இண்டேன் நிறுவனத்தின் மென்பொருள், போதிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி உள்ளது.

இதை அம்பலப்படுத்த,'பைதான்' என்ற மென் பொருள் கட்டளைகளை எழுதினேன்.அதை, இண்டேன் மென்பொருளில் பயன்படுத்தியபோது, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டீலர்களின், பயனாளர் அடையாள குறியீடுகள் கிடைத்தன.அவற்றில், 9,490 டீலர்களின் குறியீடுகளை வைத்து, ஒரு நாள் முழுவதும்தகவல்களை சேகரித்தேன்; 58.26 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்கள், முகவரிகள் உள்ளிட்ட தகவல்களை என்னால் பெற முடிந்தது.

அந்த சமயத்தில், என் முயற்சியை, இண்டேன் மென்பொருள் தடுத்து நிறுத்தியது. இதனால்,

Advertisement

மீதமுள்ள தகவல்களை பெற முடியவில்லை. இண்டேன் மென்பொருள், போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வலிமையானதாக உருவாக்கப் படாததால், 58.26 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இண்டேன் நிறுவனமும், ஆதார் அடையாள அட்டை ஆணையமும், இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-பிப்-201921:10:11 IST Report Abuse

Nallavan Nallavanஎந்த மொழியைப் பயன்படுத்தி நிரவல்களை எழுதினாலும் ஆதாரின் நிறுவனமான UIDAI இன் சர்வர் அனுமதித்தால்தான் அதை செயல்படுத்த முடியும் ...... ஆகவே ஹாக் செய்துவிட்டதாகவோ, தகவல்களைப் பெற்றதாகவோ கூறுவது பொய் .....

Rate this:
Manian - Chennai,இந்தியா
22-பிப்-201900:17:36 IST Report Abuse

Manianதவறு. ஒரு மென் பௌலில் அல்லது சிபியு கோடில் திருடும் கிருமியை நிறுவ முடியும். இன்டெல் கம்பியூட்டர்களில் இது முடியும் என்று நிரூபித்துள்ளார். பொதுவாக, இந்தியாவில் ரகசியம் கிடையாது, அதை திருடி விற்பவர்களே அதிகம். ஆகவே, கட்டுரையாளர் சொன்னது மேல் நாடுகளிலும் நடக்கிறது. அது உண்மையே. ...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
20-பிப்-201918:19:59 IST Report Abuse

K.Sugavanamடிஃஜிட்டல் நா இதுவுந்தானுங்கோ..இதுக்கெல்லாம் யாரு கவலைப்பட போகிறார்கள்..

Rate this:
R S BALA - Chennai,இந்தியா
20-பிப்-201916:17:06 IST Report Abuse

R S BALAராபர்ட் ஆதார் கார்ட் டீட்டைல் வச்சு ஏழைங்க அகௌண்ட்டுல ஏதாச்சும் பணம் போட போறியா.

Rate this:
Manian - Chennai,இந்தியா
22-பிப்-201900:18:27 IST Report Abuse

Manianலஞ்சம் வாங்கும் பிச்சை காரர்களுக்கு எதற்கு அவர் காசு? ...

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X