அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., தொகுதி, உடன்பாடு, அறிவிப்பு, முந்தியது!

கூட்டணி அறிவிப்பில், வழக்கம் போல, அ.தி.மு.க., முந்தியது. அதனுடன் கூட்டு சேர முன்வந்துள்ள கட்சிகளுடன், தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. பா.ம.க.,வுக்கு, ஏழு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா, எம்.பி., பதவியும் ஒதுக்கியுள்ள, அ.தி.மு.க., தலைமை, தமிழக, பா.ஜ.,வுக்கு, ஐந்து தொகுதிகளை தந்துள்ளது. தே.மு.தி.க.,வுக்கும், அதே எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டு, பேச்சு நடத்தி வருகிறது. இடைத்தேர்தல் நடக்க உள்ள, 21 சட்டசபை தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவையும், அ.தி.மு.க., பெற்றுள்ளது.
பா.ஜ., மற்றும் பா.ம.க.,வுடன், அ.தி.மு.க., தரப்பில், பல கட்டமாக நடந்த ரகசிய பேச்சை தொடர்ந்து, இக்கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்புக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு, அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிட பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, நட்சத்திர ஓட்டலில், நேற்று காலையில், அ.தி.மு.க., - பா.ம.க., இடையே, கூட்டணி பேச்சு நடந்தது.

ஒதுக்கீடு


அ.தி.மு.க., தரப்பில், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள்,தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர். பா.ம.க., தரப்பில், அக்கட்சி நிறுவனர், ராமதாஸ், மாநில தலைவர், ஜி.கே.மணி, இளைஞர் அணித் தலைவர், அன்புமணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பேச்சு முடிவில், பா.ம.க.,வுக்கு,

ஏழு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா, எம்.பி., பதவி ஒதுக்குவதற்கு முடிவானது. அதற்கு கைமாறாக, 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, பா.ம.க., ஆதரவு அளிக்க, தீர்மானிக்கப் பட்டது.

அறிவிப்பு


இதற்கான ஒப்பந்தத்தில், இ.பி.எஸ்., பன்னீர்செல்வம், ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.மதியம், அதே ஓட்டலில், அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, பேச்சுநடந்தது. மத்திய அமைச்சர்கள், பியுஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், மேலிடபொறுப்பாளர், முரளிதர் ராவ்,

தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.எட்டு தொகுதிகள் கேட்ட, பா.ஜ.,வுக்கு, இறுதியாக, ஐந்து லோக்சபா தொகுதிகள் ஒதுக்க முடிவானது. இது தொடர்பான அறிவிப்பை, இரு கட்சி தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தே.மு.தி.க., தரப்புடனும் தொடர்ந்து பேச்சு நடக்கிறது. அதன்படி, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள, விஜயகாந்த் வீட்டுக்கு, பியுஷ் கோயல் உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்கள் சென்றனர். அங்கு, விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ்

ஆகியோரை சந்தித்து பேசினார்.

இழுபறி


ராஜ்யசபா, எம்.பி., பதவி, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப் பட்டதை சுட்டிக்காட்டி, அக்கட்சியை விட கூடுதலாக ஒரு தொகுதியாவது வேண்டும் என, தே.மு.தி.க., தரப்பில் வலியுறுத்தப் பட்டதால், பேச்சில் இழுபறி ஏற்பட்டு உள்ளது. அதனால், விஜயகாந்த் வீட்டுக்கு, அ.தி.மு.க., தரப்பில் யாரும் செல்லவில்லை.இது தவிர, அ.தி.மு.க., கூட்டணியில், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு மக்கள் கட்சி ஆகியவையும் இணைய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, பா.ம.க., - பா.ஜ., ஆகிய இரு கட்சி களும், 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி. மு.க., வேட்பாளர் களுக்கு ஆதரவு அளிப்பதற்கும், ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில், கூட்டணியை உறுதி செய்து, உடன்பாட்டை அறிவிப்பதில், அ.தி.மு.க., தலைமை, தி.மு.க.,வை முந்தி உள்ளது.
காங்கிரசுடனான உடன்பாட்டையே, இன்னும் முடிவு செய்யாத நிலையில், தி.மு.க., தலைமை உள்ளது. ஆனால், 'மெகா' கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவது டன், இடைத் தேர்தலில் ஒட்டு மொத்தமாக, அனைத்து தொகுதிகளையும் அள்ளவும், அ.தி.மு.க., வியூகம் அமைத்து உள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
21-பிப்-201914:01:16 IST Report Abuse

oceஅவர் வருவார் இவர் வருவார் என்பதெல்லாம் அவரவர் எண்ணத்தின் வெளிப்பாடுகள். கட்சிகளைப்பற்றியும் அதனை இயக்குபவர்பற்றியும் பொத்தாம் போக்காக கூறும் முடிவுகள். வாக்களிப்பு என்பது அதனை தீர்மானிக்கும் சாமானிய மக்களிடம் உள்ளது. தேர்தலில் வாக்கு சாவடிக்குள் வாக்களிப்பு நேர விநாடியில் அலைபாயும் எண்ணப்படி விநாடிக்கு விநாடி வாக்களிப்பு முடிவு மாறுதலுக்கு உட்படுகிறது. சில பேர்கள் வாக்கு சாவடிக்குள் ஏற்கனவே செய்த முடிவின் படி யான சின்னத்திற்கு வாக்களிப்பர். சிலர் இவிஎம் அருகில் சென்று அதில் உள்ள சின்னங்களைப்பார்த்து வியந்து போய் கட்சிகளையும் கட்சி வேட்பாளர்களையும் பற்றி எண்ணாமல் மறந்து விட்டு அதில் பளிச்சென்று தெரியும் சின்னங்களில் ஏதாவதொன்றுக்கு வாக்களிப்பர். இன்னும் சிலர் ஆர்வக்கோளாறில் வரிசையாக காட்டப்பட்டுள்ள சின்னங்களில் தேடிய சின்னம் தெரியாமல் அடுத்த சின்னம் ஏதாவதொன்றுக்கு பொத்தானை வேகமாக அமுக்குவர். இந்த இரண்டும் கெட்டான் வாக்களிப்பை பதினெட்டு வயதினரே செய்வர். இன்னும் பலர் வாங்கிய பணம் கவனம் வந்து பணம் கொடுத்த சின்னத்தை தேடிப்பிடித்து வாக்களிப்பர். இன்னும் பல பேர் வேட்பாளர்களின் தகுதி தராதரங்களை முன்கூட்டியே அளந்தறிந்து அதன்படி மனதில் திட்டமிட்ட சின்னம் மனதில் படிந்து வாக்களிப்பர். சிலர் அப்படி திட்டமிட்டும் சின்னம் மனதில் படியாமல் நோட்டாவுக்கு வாக்களிப்பர். வாக்களிக்க செல்பவர்கள் வாக்கு பெட்டி அருகே சென்று ஏற்கனவே வாக்களிக்கும் நினைத்த சின்னத்தை விட்டு இந்த சின்னமா அந்த சின்னமா எனபதில் விநாடிக்கு விநாடி அவர்களது தீர்மானத்தில் எண்ணற்ற சபலங்கள் மாறிக்கொண்டே இருக்கும். வாக்குப்பெடிகள் அருகே நிற்பவர்கள் மன நிலைகளில் இவருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட ஒரேவிதமான சீரான மனப் போக்கு என்றும் வந்தது இல்லை. அவரவரவர் மன நிலைகளில் வாக்களிப்பு விநாடிகளில் தோன்றும் சஞ்சலம் தெளிவு அசட்டை ஆர்வம் நன்றி காட்டல் விரக்தி விசுவாசம் பற்றுதல் மகிழ்ச்சி வெறுப்பு போன்ற எண்ணற்ற மன எழுச்சிகளில் ஏற்படும் திடீர் மாறுதல்களில் வாக்களிப்பு சின்னங்கள் அந்த இடத்தில் மாறக்கூடும். வாக்களிப்பு இடம் அடிக்கடி மாறும் இயல்புள்ள மனித மன சஞ்சலங்களுக்கு இடமளிக்கும் கூடாரம். முன் தீர்மானத்திலிருந்து பிசகி கடைசி விநாடிகளில் எழும் எண்ணத்தின் ஓட்டப்படியே அவர்கள் வாக்கு செலுத்துவர். ஆட்சிகளின் ஐந்தாண்டு சாதனைகளையும் வேதனைகளையும் அதனால் நாட்டு மக்களுக்கு கிடைத்த நன்மை தீமைகளையும் எவரும் எண்ணிப்பார்த்து வாக்களிப்பதில்லை. தேர்தலில் நிற்கும் வேட்பாளர் நல்லவரா கெட்டவரா ஊழல் செய்பவரா என எதையும் சிந்திக்காமல் தனக்கு என்ன செய்தார் என்பதையே சுயநல உள் நோக்கமாக வைத்து வாக்களிப்பர். அவர்களது இத்தகைய தற்சார்பான போக்கு ஒரு நல்ல ஜனநாயக அமைப்பை வராமல் தடுத்து குழிக்குள் தள்ளும் தேச துரோக செயலாகும். தேர்தலுக்கு முன் வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்க செய்யும் மூளை செலவுக்கு அரசியல் கட்சிகள் செய்த செலவினை அவர்களுக்கு ஆட்சி வாய்ப்பு கிடைத்தவுடன் அதை முதல் கட்டமாக அள்ளுவர். தனக்கு வாக்களித்த மக்களைப்பற்றி சிந்திப்பதில்லை. ஐந்தாண்டுகளில் முதல் மூன்று வருடங்கள் இப்படி ஓடும் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில் அதாவது தேர்தல் நெருங்கும் இறுதிகால கட்டத்தில் மீண்டும் தனக்கு ஓட்டு கிடைக்க வேண்டும் என்பதாற்காக மக்களைப்பற்றி சற்று சிந்திக்கிறார்கள். கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். ஜன நாயகத்தின் ஆணி வேர் வாக்களிக்கும் சாமானிய மக்களிடம் உள்ளதை அரசியல் கட்சிகள் மறந்துவிடுவது இயல்பாகி விட்டது.

Rate this:
elangovan - TN,இந்தியா
20-பிப்-201923:22:48 IST Report Abuse

elangovanNAM TAMIZHAR announce to fight alone 39 seats, we salute. Not succeed due to some reason . Nammavar (MNM) fight alone in 39 seats, ie real Makkal KOOTANI. . These alliance shows No Value for MODI and No value for Rahul. They all are depending on local corrupted parties. It is shame to the BJP and congress. People to think, and analyze the value of vote, whats happening in AIADMK , how the people are coming to power total TN will know. After AMMAS death , each and every one of AIADMK volunteers waiting for changes that will reflect in coming elections. Total TN don't vote for SYMBOL, vote for good man and thorw out the bad political leader from politics. what is the use of these alliance again will come to the power to corrupt and damage the developments in country. When politics to be clean like water, ie the real freedom for india. At this time is right time to change status of TN Politics to support new leader who can care and fight for corruption ie Nammavar (MNM). Give him a chance. .

Rate this:
Meenu - Chennai,இந்தியா
20-பிப்-201921:50:49 IST Report Abuse

Meenuஅவ்வளவு ஆசையா உங்களுக்கு பதவி சுகத்துக்கும், ஊழல் பணம் சம்பாதிக்கவும். கண்டிப்பாக உங்களுக்கு எங்கள் ஓட்டு இல்லை.

Rate this:
மேலும் 86 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X