டில்லியில் ராகுல் - கனிமொழி பேச்சு: தொகுதி பங்கீடு விரைவில் அறிவிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
டில்லியில் ராகுல் - கனிமொழி பேச்சு:
தொகுதி பங்கீடு விரைவில் அறிவிப்பு

லோக்சபா தேர்தலுக் கான தொகுதி பங்கீடு குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுலுடன், தி.மு.க., ராஜ்யசபா,எம்.பி., கனிமொழி, டில்லி யில் நேற்று, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சு நடத்தினார்.விரைவில், சென்னையில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

டில்லியில், ராகுல் - கனிமொழி, பேச்சு,தொகுதி, பங்கீடு, விரைவில்,அறிவிப்பு

வரும் லோக்சபா தேர்தலில், தொகுதிகளை பங்கிடுவது குறித்து, தி.மு.க., - காங்கிரஸ் தலைவர்கள், டில்லியில் மூன்று நாட்களாக பேச்சு நடத்தி வந்தனர்.

மூத்த தலைவர்கள்


தி.மு.க., மூத்த தலைவர், டி.ஆர்.பாலுவும், ராஜ்யசபா, எம்.பி., கனிமொழியும், காங்., மூத்த தலைவர்கள் அகமதுபடேல், குலாம்நபி ஆசாத் ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.இறுதிக் கட்டமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல், நேற்று, கூட்டணி தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


அவரது இல்லத்தில் நடந்த ஆலோசனையில், மேலிடப்பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழக, காங்., தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி மற்றும் மூத்த தலைவர்கள் சிதம்பரம், திருநாவுக்கரசர்,

இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல கட்டமாக நடந்த இந்த ஆலோசனையின் போது, தி.மு.க., தரப்புடன், போன் மூலமாக சில விபரங்கள் விவாதிக்கப்பட்டன.அப்போது, காங்கிரசுக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாக, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கும்படி, காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதன் பின், கனிமொழியும், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலும், ராகுல் இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டனர். ஒரு சில நிமிடங்களில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் வரவழைக் கப்பட்டு, ஆலோசனை தொடர்ந்தது. அப்போது, 10 இடங்கள் வரை ஒதுக்குவதற்கு, தி.மு.க., தரப்பு இறங்கி வந்தது. ஆனாலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு, பா.ம.க., சென்றுவிட்ட நிலையில், மேலும் ஒரு தொகுதியைச் சேர்த்து, 11 ஆக தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

தி.மு.க., தரப்பில், அதற்கு உத்தரவாதம் தராமல், ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தேச பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த, 20 தொகுதிகளில், ஐந்து தொகுதிகளுக்கு, முதற்கட்டமாக சம்மதம் தெரிவிக்கப்பட்டது.காங்கிரஸ் கேட்கும் மற்ற தொகுதிகளை, அடுத்தடுத்த சுற்றுக்களில் பேசியும், மற்ற கூட்டணிகட்சிகளுடன் தொகுதி பங்கீடு தெளிவான பின், தீர்வு காணலாம் என்றும், இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

ராகுலுடன், கனிமொழி, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, நேற்று பேச்சு நடத்தினார். இதனால், கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு,

Advertisement

விரைவில் வெளியாகலாம் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


பா.ம.க., மீது பாய்ச்சல்


இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, டில்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:சமூக நீதிக்காக போராடு வதே, தன் கொள்கை என, பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கூறுவார்.தற்போது, அந்த கொள்கையை, அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, குழி தோண்டி புதைத்து விட்டார்.

இரு தரப்பிலும் பேச்சு நடத்தும் வழக்கமுள்ள கட்சியாக, பா.ம.க., உள்ளது மிகத் தவறு. யாருடன் கூட்டணி என்பதில், குறைந்தபட்ச கொள்கை அடிப்படை இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாமல்,யாரோடு வேண்டுமானா லும் கூட்டணி அமைக்கலாம் என, பா.ம.க., நினைப்பது, சரியானதாக தெரிய வில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முடிவாகி விட்டது. இது குறித்த அறிவிப்பு, சென்னையில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (26+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
20-பிப்-201921:57:53 IST Report Abuse

balரெண்டு பெரும் ஜாமினில் இருக்கோம் எப்போ தூக்கி உள்ளே போடுவாங்களோ தெரியவில்லை...உங்க அப்பா எப்படி டபாய்த்தார்...என்று ராகுல் கூறுகிறார்...கனியிடம்.

Rate this:
adalarasan - chennai,இந்தியா
20-பிப்-201921:54:52 IST Report Abuse

adalarasanநல்ல போட்டோ 2 பேரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்ஒருவர் ஜெயிலில் இருந்து விட்டு வந்தவர்?கேஸ் மேல்முறையீட்டில் உள்ளது?இன்னொருவர் பெயிலில் வெளியே உள்ளார்? ஏன்னா பொருத்தம்கூட்டணி சரிதான்/

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
20-பிப்-201918:33:21 IST Report Abuse

Bhaskaranநேருவும் இலங்கை பெண் அமைச்சரும் சந்திக்கும்போதும் பின் இலங்கையின் கொத்தலாவலியும் இந்திராவும் சந்திக்கும்போதும் மோடியும் ஜெயாவும் சந்திக்கும்போதும் மகாகேவலமாகப்பேசி அரிப்பைதீர்த்துக்கொண்ட திமுகவினர் மற்றக்கட்சியினர் இப்போது நாகரீகமாக நடந்துகொள்வதை பார்த்தாவது நரகல்நடைபேச்சை தவிர்க்கணும்

Rate this:
sridhar - Chennai,இந்தியா
20-பிப்-201920:47:06 IST Report Abuse

sridharநாத்த வாயன் evks இளங்கோவனை விட்டுடீங்களே....

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X