அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சூடு, சொரணை இல்லையா?
பா.ம.க.,வுக்கு ஸ்டாலின் கேள்வி

ஆம்பூர்:''அ.தி.மு.க.,வின் ஊழலை விமர்சனம் செய்து புத்தகம் வெளியிட்டு, இப்போது அவர்களுடனே கூட்டணி வைப்பதற்கு, பா.ம.க.,வுக்கு வெட்கமாக இல்லையா?'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 சூடு, சொரணை, இல்லையா?,பா.ம.க.,வுக்கு ஸ்டாலின் கேள்வி

வேலுார் மாவட்டம், ஆம்பூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.இதில், ஸ்டாலின்பேசியதாவது:

பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அவரது மகன்

அன்புமணியும், அ.தி.மு.க.,வை பற்றி என்னென்ன பேசினர்... 2009 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,-வோடு கூட்டணி சேர்ந்து, ஏழு தொகுதிகளில், பா.ம.க., போட்டியிட்டது.அப்போது, என்ன நிலைக்கு ஆளாகினர் என்பது எல்லாருக்கும் தெரியும். நான் அப்போதே, 'ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட, பா.ம.க., ஒன்பது தொகுதிகளில் தோற்று விட்டது' என்றேன். இது, சிலருக்கு புரியவில்லை.

அதாவது, லோக்சபாவுக்கு ஏழு தொகுதிகளும், ராஜ்யசபாவுக்கு ஒரு தொகுதியும், பா.ம.க.,வுக்கு கொடுக்கப்பட்டது. ஒரு ராஜ்யசபா, 'சீட்' என்பது, இரண்டு லோக்சபா, எம்.பி.,க்களுக்கு சமம்.
அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணியை, அப்போதே மக்கள்தோற்கடித்தனர். இப்போதும், ஏழு, பிளஸ், 1 கொடுத்துள்ளனர். என்ன நடக்கப்போகிறது என, லோக்சபா தேர்தல் முடிவில் பாருங்கள்.

சமீபத்தில், அ.தி.மு.க., ஆட்சியின் ஊழலைப் பற்றி விமர்சனம் செய்து,ராமதாஸ் புத்தகமே வெளியிட்டு இருந்தார். அந்த பெரிய மனிதர் தான், இன்று,

Advertisement

அ.தி.மு.க.,தலைவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து, கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுகிறார்.


அவருக்கு வெட்கம்,சூடு,சொரணை இல்லையா? மக்களின் பிரச்னை களுக்காக, இவர்கள் சேரவில்லை.சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி அது. கால் இல்லாத, பா.ஜ., தமிழகத்தில் காலுான்ற நினைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-பிப்-201918:11:19 IST Report Abuse

Saleem இந்த இரு கட்சிகளும் தமிழகத்தை ஆள தகுதி இல்லாத கட்சிகள் தான் (DMK & ADMK ) சீமான் போன்ற புதிய மற்றும் முன்னேற்ற கொள்கைகள் உள்ளவர்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது நல்லது ... கொடுத்தால் தான்தெரியும் இவர் என்ன செய்வார் என்று.... மாற்றதைகொண்டுவருவம் ...

Rate this:
S.BASKARAN - BANGALORE,இந்தியா
22-பிப்-201916:52:29 IST Report Abuse

S.BASKARANஇது மாதிரி சொல்ல தனக்கு தகுதி இருக்கிறதா என்று கேட்டு கொள்ளவும்.

Rate this:
R S GOPHALA - Chennai,இந்தியா
22-பிப்-201913:14:47 IST Report Abuse

R S GOPHALAரெண்டு வார்த்தைங்கள விட்டுட்டீங்க சுடாலின். வெக்கம், மானம் அதுக்கு அப்புறந்தான் சூடு சொரணை. So நீங்களே ஒத்துக்கிட்டிங்க...அதாவது, இந்த நாலுமே ஓங்குளுக்கும் ஒங்க குடும்பத்துக்கும் "எப்பவுமே" கிடையாதுன்னு. அதுவும் இல்லாம, நீங்க எல்லாம் யாரையும் கேள்வியே கேக்க கூடாது. எதுக்குமே ஒரு யோக்கியதை வேணுமுல்ல.

Rate this:
மேலும் 120 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X