பா.ம.க.வுக்கு 7 + 1 கொடுத்தது ஏன்? கச்சிதமாக காய் நகர்த்திய அ.தி.மு.க. Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பா.ம.க.வுக்கு 7 + 1 கொடுத்தது ஏன்?
கச்சிதமாக காய் நகர்த்திய அ.தி.மு.க.

சென்னை:சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு தர முன்வந்ததால் பா.ம.க.வுக்கு ஏழு லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியை அ.தி.மு.க. வாரி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 பா.ம.க.வுக்கு, 7 + 1 ,கொடுத்தது,ஏன்? கச்சிதமாக,காய்,நகர்த்திய அ.தி.மு.க.

தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தகுதியிழப்பு மறைவு போன்ற காரணங்களால் 21 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க.விற்கு 115; தி.மு.க.விற்கு 88; காங்கிரசுக்கு 8; முஸ்லிம் லீக் மற்றும் சுயேச்சைக்கு தலா 1 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.


தற்போதுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் மூன்று பேர் தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். வேறு கட்சிகளை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் எப்போது வேண்டுமானாலும் அணி மாறக்கூடிய அபாயமும் உள்ளது.

இந்த சூழ்நிலையில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தலுடன் இணைத்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைக்க எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை தோல்வி அடையச் செய்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகள் தீவிரமாக உள்ளன.

இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணியில் பா.ஜ. - பா.ம.க. - தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவை இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. இக்கூட்டணியை லோக்சபா தேர்தலுக்கு மட்டுமின்றி சட்டசபை இடைத்தேர்தலுக்கும் பயன்படுத்த அ.தி.மு.க. முடிவு செய்தது.

இதன் காரணமாக பா.ம.க. உடன் நடந்த பேச்சு வார்த்தையில் '21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்போது நிபந்தனை யற்ற ஆதரவு தர வேண்டும்' என அ.தி.மு.க.

சார்பில் வலியுறுத்தப்பட்டது; அதை பா.ம.க. ஏற்றது. அதற்கு பிரதிபலனாக ஏழு லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா பதவியை பா.ம.க. கேட்டது.

அதைத் தொடர்ந்து பா.ம.க. கேட்ட தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியது. ஏனெனில் இடைத்தேர்தல் நடக்க உள்ள பெரம்பூர், திருப்போரூர், பூந்தமல்லி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், குடியாத்தம், சோளிங்கர், ஆம்பூர் ஆகிய தொகுதிகள் வட மாவட்டத்தில் வருகின்றன.


இங்கு பா.ம.க.விற்கு தனி ஓட்டு வங்கி உள்ளது. பா.ம.க. ஆதரவுடன் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம்.ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் 2021 வரை நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்த உடன்பாட்டை அ.தி.மு.க. தலைமை செய்துள்ளது.

தமிழகத்தில் அரசுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்செரிக்கையுடன் சட்டசபை இடைத்தேர்தலுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகளிடம் அ.தி.மு.க. உறுதிப்படுத்தி உள்ளது.

காலியாக உள்ள தொகுதிகள்சென்னை மாவட்டம் பெரம்பூர்; காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர்; திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி; தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அரூர்; வேலுார் மாவட்டம் குடியாத்தம் சோளிங்கர் ஆம்பூர்; கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி; தஞ்சாவூர்; திருவாரூர்; திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை; துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் விளாத்திகுளம்; தேனி மாவட்டம் பெரியகுளம் ஆண்டிப்பட்டி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி; விருதுநகர் மாவட்டம் சாத்துார்; சிவகங்கை மாவட்டம் மானாமதுரை; மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்; கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்.

10 ஆண்டுக்கு பின்பத்து ஆண்டுகளுக்கு பின் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது.சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு காலை 10:30 மணிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வந்தனர். அவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்தனர்.

காலை 11:00 மணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் வந்தனர். அவர் களுடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் வந்தனர். ராமதாஸ், அன்புமணி ஆகியோரை

Advertisement

சால்வை அணிவித்து முதல்வ ரும் துணை முதல்வரும் வரவேற்றனர்.

அதன்பின் இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை துவங்கியது. பேச்சுவார்த்தை முடி வில் பா.ம.க.விற்கு ஏழு லோக்சபா தொகுதி களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தர அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்தது. காலியாக உள்ள சட்ட சபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு நிபந்தனை யற்ற ஆதரவு தர பா.ம.க. சம்மதம் தெரிவித்தது.


அதைதொடர்ந்து அ.தி.மு.க. - பா.ம.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. சார்பில் பன்னீர் செல்வம், பழனிசாமி ஆகியோரும் பா.ம.க. சார்பில் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

கடந்த 2009 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி யில் பா.ம.க. இடம்பெற்றது. அப்போது அக் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அனைத்திலும் அக்கட்சி தோல்வியை தழுவி யது. பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அ.தி. மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது.

அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பின் அ.தி.மு.க. ஒருங் கிணைப்பாளரும், துணை முதல்வரு மான பன்னீர்செல்வம் கூறியதாவது:பா.ம.க.வுடன் இணைந்து மெகா கூட்டணியாக வெற்றி கூட்டணி அமைத்து தமிழகத்திலும் புதுச்சேரி யிலும் தேர்தலை சந்திப்பது என்று நல்ல முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.விற்கு ஏழு லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்படும். அத்துடன் 2019ல் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்த லில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட் பாளர்களுக்கு பா.ம.க. தனது முழு ஆதரவை அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-201913:03:56 IST Report Abuse

Malick Rajaகாயெல்லாம் நகர்த்தி கடைசியில் வெங்காயமாக போவது தெரியவில்லை .. பாவம் மே மாதம் அரசு அம்பேல்.. அதற்கு முன் உச்ச நீதிமன்ற தீர்ப்புவந்தால் து .முதல்வர் அம்பேல் . அப்பாலே சேலம் நோக்கி ஓடுவார் ஒருவர்.. மற்றவர்கள் அணி திரள்வார்கள் ஆக பிஜேபியுடன் கூட்டுபோட்டது விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுந்த கதை கேட்போம்.. பாமகவை மக்கள் தூக்கியெறிந்து நாளாகிவிட்டது எப்போது கூட்டணி போட்டார்களா அன்றுமுதல் வன்னியாசமுதாய பெருமக்கள் பாமகவை மறந்துவிட்டார்கள் இப்போது ஒரே நம்பிக்கை திமுக மட்டும் என்பது மே மாத முடிவில் பார்க்கலாம் ..

Rate this:
hasan - tamilnadu,இந்தியா
22-பிப்-201918:31:52 IST Report Abuse

hasanஇடைத்தேர்தலில் தலைகீழ் நின்று தண்ணீர் குடிச்சாலும் அதிமுக படுதோல்வி அடையும் , நாடளுமன்ற தேர்தலில் காவி கட்சி ஆட்சியிழந்தால் அடுத்து அதிமுக ஆட்சியை இழப்பது உறுதி , நாம ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது ( எலெக்ஷனுக்கு பிறகு பழனிச்சாமியின் மைண்ட் வாய்ஸ் ),

Rate this:
metturaan - TEMA ,கானா
20-பிப்-201917:32:15 IST Report Abuse

metturaanசரி தப்பு எல்லாம் அப்புறம் ஒரு ஸ்திரத்தன்மையான அரசு வேண்டும் .. திரு பழனிச்சாமி செய்வது மிகச்சரி

Rate this:
20-பிப்-201919:59:49 IST Report Abuse

Basic_Instinctமக்கள் இந்த கூட்டணி அமைய வேண்டும் என்று கோவிலில் பிரார்த்தனை செய்தார்களாம்...

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X