40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்அ.தி.மு.க. கூட்டணி குறித்து ராமதாஸ் பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்அ.தி.மு.க. கூட்டணி குறித்து ராமதாஸ் பேட்டி

Added : பிப் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை, ''அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மெகா கூட்டணி. இது மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக வளரும். தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்'' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பின் ராமதாஸ் அளித்த பேட்டி:அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இந்த கூட்டணி மக்கள் நலக் கூட்டணி; மெகா கூட்டணி; வெற்றி கூட்டணி. இது மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக வளரும். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்.ஏனெனில் கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததுடன் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பதற்காக 10 கோரிக்கைகளை வைத்துள்ளோம். முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் அந்த மனுவை வழங்கி உள்ளோம்.காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் மற்றும் 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்கான முழு முயற்சிகளை அ.தி.மு.க. எடுத்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளனர்.படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மணல் குவாரிகள் மூடப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் சதியை முறியடிக்க வேண்டும். இதற்காக அ.தி.மு.க. - எம்.பி.க்கள் லோக்சபாவில் போராடினர்.பொதுத்துறை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.இவை அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த உரிமைகளை வென்றெடுக்கும் கோரிக்கைகள். இதற்கு இரு கட்சிகளும் ஆதரவு கொடுத்த அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
21-பிப்-201900:02:30 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) கண்டிப்பாக இந்த கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-பிப்-201911:46:51 IST Report Abuse
Malick Raja அட்றா சக்கை .. அத்தேரிபாட்சா ..கொழுக்கட்டை .. அப்பூ ..முதல்லே கவர்னரிடம் கொடுத்த ஊழல்மனுவை வாபஸ் வாங்குங்கள் .. ஊழல் புத்தகம் பாதிப்புகள் எல்லாம் வெளியாக இருக்கிறது .. சொல்லாடல் இல்லாமல் எழுதியே பத்ரம் போட்டுவிட்டு இப்படி ஊசலாட்டம் செய்ததன் விளைவு 40.ல் 4.ஐ நீக்கி மீதம் மீதம் உள்ளது தானே நமது வெற்றி .. பணம் பெற்றாகி விட்டது .இனி யார் ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன /
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-பிப்-201907:50:24 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 40 லோக்சபா தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்'' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். பதில் நீங்க எந்த கட்சிங்குறதை பொறுத்து மாறும்.. ஹா.. ஹா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X