அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்துடன் கோயல் சந்திப்பு பா.ம.க.வை விட அதிக 'சீட்' கோரிக்கை

Added : பிப் 20, 2019 | கருத்துகள் (7)
Advertisement
விஜயகாந்துடன் கோயல் சந்திப்பு பா.ம.க.வை விட அதிக 'சீட்' கோரிக்கை

சென்னை, கூட்டணி இழுபறி குறித்து விஜயகாந்தை சந்தித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு நேற்று மாலை 6:00 மணிக்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பா.ஜ. மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் வந்தனர்.அவர்களை விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு விஜயகாந்திற்கு பூங்கொத்து கொடுத்து உடல் நலம் தேறியதற்காக பியுஷ் கோயல் வாழ்த்து தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, 'அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும்' என விஜயகாந்திடம் அவர் வலியுறுத்தினார். தொகுதி பங்கீட்டில் உள்ள இழுபறிகள் குறித்து இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது. 'பா.ம.க.வை விட கூடுதல் தொகுதிகள் வழங்கினால் மட்டுமே கூட்டணியை உறுதி செய்ய முடியும்' என விஜயகாந்தும், பிரேமலதாவும் அவர்களிடம் கறாராக கூறியுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமையிடம் பேசுவதாக பியுஷ் கோயல் உறுதியளித்தார்.பின் பியுஷ் கோயல் அளித்த பேட்டி:பிரதமர் மோடி, பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா சார்பாக விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சி கூட்டணிக்கு அப்பாற்பட்டு நட்பு ரீதியாகவே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி பேச்சு தொடர்ந்து நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-பிப்-201916:18:32 IST Report Abuse
Malick Raja கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் உடல் நிலையற்ற ஒருவரை இப்படி உட்கார வைத்து படம் காட்டுவது நியாயமற்ற ஒன்றே .. என்னய்யா பெரிய தேர்தல் இடஒதுக்கீடு வேண்டி கிடக்கு .. அவருக்கோ உடல்நிலையை பார்க்கமுடியாமல் தவிக்கிறார் அவரின் உடல்நிலையை கொஞ்சம் கூட கண்காணிக்காமல் இப்படி கட்சிக்கு பலம் சேர்க்க நினைப்பது நியாயம்தானா ? விஜயகாந்த் சிலை போல இருக்கிறாரே .. பரிதாபம் தான் .. ஈவிரக்கமற்றவர்கள் உடனிருப்பவர்கள்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-பிப்-201914:00:49 IST Report Abuse
இந்தியன் kumar முடிவெடுக்க தாமதம் ஆனதால் நம்பிக்கை இழந்த கட்சி தேமுதிக
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
21-பிப்-201912:43:21 IST Report Abuse
hasan இந்த தேர்தலுடன் பா ம க , தேமுதிக இரண்டும் காணாமல் போகலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X