அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக கூட்டணியில் காங்., கட்சிக்கு 10 தொகுதிகள்? இன்று அறிவிப்பு

Updated : பிப் 21, 2019 | Added : பிப் 20, 2019 | கருத்துகள் (72)
Advertisement

புதுடில்லி: திமுக - காங்., தொகுதி பங்கீடு இன்று(பிப்.,20) அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக உள்ளது.





லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, தி.மு.க., - காங்கிரஸ் இடையே டில்லியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுலுடன், தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி, டில்லியில் நேற்று(பிப்.,19), இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சு நடத்தினார். இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று(பிப்.,20) வெளியாகிறது.


சென்னை வருகை:


காங்., கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார். தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை கையெழுத்தாகிறது. காங்., 15 தொகுதிகள் கேட்ட நிலையில், 10 தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி காங்., கட்சிக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.






மகிழ்ச்சி:


கூட்டணி குறித்து தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், 'தி.மு.க கூட்டணியில் காங்., கட்சிக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்று(பிப். 20) அண்ணா அறிவாலயத்தில் அறிவிக்கப்படும். நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Achchu - Chennai,இந்தியா
20-பிப்-201915:38:43 IST Report Abuse
Achchu 73 வாங்கி 90 % தோத்தாப்லே போயிட கூடாது நாப்பதையும் ஜெயிச்சு காட்டுங்க பசி
Rate this:
Share this comment
Cancel
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
20-பிப்-201914:05:31 IST Report Abuse
Ram RV குறைந்தது அரை டஜன் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக வந்து காத்திருந்து கொடுத்த ஐந்து சீட்டுகளை சந்தோஷமாக வாங்கிச் சென்றனர் இங்கே. கூட்டணிக்குத் தலைமை என்று சொல்லிக் கொண்டு திரிந்தாலும் தமிழ்நாட்டு இளவரசி டில்லி இளவரசரின் அரண்மனையின் வெளியே தவம் கிடந்து ஐயா பத்து சீட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லையென்றால் ஊரில் எங்கள் மானம் போய்விடும் என்று மன்றாடுவது அங்கே. யார் பிடியில் யார்? யார் யாருக்கு அஞ்சுகிறார்கள்? யாருக்கு யார் நெருக்கடி கொடுக்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-பிப்-201914:05:03 IST Report Abuse
Pugazh V தமிழக த்தில் பாஜக நிற்கப் போகிற அந்த 5 தொகுதிகளில், திமுக அணி வேட்பாளர் ஷ்யூர் விக்டரி. எனவே அந்த 5 இடங்களுக்கு திமுக கூட்டணியில் டிமாண்ட் கூடும்.
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-பிப்-201918:29:35 IST Report Abuse
Pasupathi Subbianகாத்திருந்துபார்ப்போம்...
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
20-பிப்-201919:10:54 IST Report Abuse
வல்வில் ஓரி மதவாத தீம்காவுக்கு எல்லா தொகுதியிலும் வாயில மண்ணு.விழும் ....
Rate this:
Share this comment
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
21-பிப்-201900:14:05 IST Report Abuse
Matt Pபாஜகவுக்கு அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பா ? ...மக்கள் மாறியிருக்கலாம் . ...எப்ப்போவும் நான் தான் ராஜா என்பதெல்லாம் அந்தக்காலம் . மக்கள் சுடலையை அவர் அப்பாவை விட் விஜயகாந்தே மேல் என்றார்கள் . இனிமேல் ..அந்த மூவரையும் விட வேறொருரவர் மேலென்று நினைக்கலாம் ...பணம் பிரியாணி அடக்குமுறை இதெல்லாம் வேலை செய்யாவிட்டால் என்றைக்கோ திராவிட கட்சிகல் தமிழ்நாட்டை விட்டு அகன்றிருக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X