பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தானை புறக்கணிப்போம்: 'டிரெண்டிங்'கில் முன்னிலை

Updated : பிப் 20, 2019 | Added : பிப் 20, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
BoycottPakistan , பாகிஸ்தான், டுவிட்டர், டிரெண்டிங்

புதுடில்லி: காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை புறக்கணிக்க வேண்டும் எனக்கூறி, சமூக வலைதளமான டுவிட்டரில், #BoycottPakistan என்ற ஹேஸ்டேக் மூலம் ஏராளமானவர்கள் கருத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த ஹேஷ்டேக், இந்திய அளவில் முன்னிலையில் இருந்தது


latest tamil news




காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு, பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும்துண்டிக்க வேண்டும் என , இந்தியாவில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை, இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானை புறக்கணிப்போம் என்பதை வலியுறுத்தி, டுவிட்டரில், #BoycottPakistan என்ற ஹேஸ்டேக் பதிவு செய்யப்பட்டது. அந்த ஹேஷ்டேக் மூலம் ஏராளமான சமூக வலைதளவாசிகள் பாகிஸ்தானுக்கு எதிரான தங்களது கோபத்தை வெளிப்படுத்த துவங்கினர். இதனால், அந்த ஹேஷ்டேக், டுவிட்டரில், முன்னிலையில் இருந்தது.

இந்த ஹேஷ்டேக் மூலம், காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை அனைத்து வகையிலும் புறக்கணிக்க வேண்டும். அந்நாட்டுடனான வர்த்தகம், விளையாட்டு, ஏற்றுமதி, இறக்குமதி, சினிமா ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பழிவாங்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-201909:49:56 IST Report Abuse
ஆப்பு ஆனா பக்கிகளின் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சவுதி இளவரசரை வரவேற்போம்.
Rate this:
Cancel
Being Justice - chennai ,இந்தியா
21-பிப்-201909:18:59 IST Report Abuse
Being Justice தனி தொழில்நுட்ப பிரிவு உள்ளதாக ஏற்கனேவே சொல்லியுள்ளார்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-பிப்-201908:18:53 IST Report Abuse
Srinivasan Kannaiya பாகிஸ்த்தான் அரசியல்வாதிகளை புறக்கணியுங்கள்.. பாக் மக்கள் என்ன செய்தார்கள்.. ........................? பாக்கில் பிறந்ததுதான் அவர்கள் குற்றம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X