பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.550 கோடி தராவிட்டால் சிறை:
அனிலுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி:'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'எரிக்சன் இந்தியா' நிறுவனத்துக்கு தர வேண்டிய, 550 கோடி ரூபாயை, நான்கு வாரத்துக்குள் செலுத்தாவிட்டால், மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும்' என, அனில் அம்பானி உள்ளிட்டோருக்கு, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

 ரூ.550 கோடி ,தராவிட்டால்,சிறை,அனிலுக்கு, சுப்ரீம் கோர்ட் அதிரடி ,உத்தரவு

பிரபல தொழிலதிபர், அனில் அம்பானி தலைமையிலான, ஆர்காம் எனப்படும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், மொபைல் போன் மற்றும் தொலைபேசி இணைப்பு வழங்கும் சேவையை வழங்கி வந்தது.

இந்த நிறுவனம் சார்பில், இந்த சேவையை வழங்கும் பணி,ஐரோப்பிய நாடான, ஸ்வீடனை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'எரிக் சன்' நிறுவனத்துக்கு வழங்கபட்டது. இதற்காக, ஏழு ஆண்டு ஒப்பந்தத்தில், எரிக்சனின் இந்திய நிறுவனமான, எரிக்சன் இந்தியா கையெழுத்து இட்டது.

ஆனால், 'இந்த சேவைக்காக வழங்க வேண்டிய, 1,500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் கம்யூனி கேஷன் நிறுவனம் தரவில்லை' என, கம்பெனி சட்ட மேல்முறையீட்டு ஆணையத்தில், எரிக்சன் இந்தியா வழக்கு தொடர்ந்தது.அதைத் தொடர்ந்து, இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கடந்தாண்டு அளித்த தீர்ப்பில்,'எரிக்சன் இந்தியா நிறுவனத்துக்கு, 550 கோடி ரூபாயை அளிக்க வேண்டும்' என, ஆர்காம் நிறுவனத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவமதிப்பு:

கடந்தாண்டு, அக்டோபரில்

அளிக்கப்பட்ட உத்தரவில், '2018, டிச., 15க்குள், இந்த தொகையை அளிக்க வேண்டும்.அவ்வாறு அளிக்காதபட்சத்தில்,நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம்' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. தொகையை செலுத்தாததால், ஆர்காம் நிறுவனத் துக்கு எதிராக, எரிக்சன் இந்தியா, உச்ச நீதிமன்றத் தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.

இதை விசாரித்த, நீதிபதிகள், ஆர்.எப்.நாரிமன், வினீத் சரண் அமர்வு, கடந்த வாரம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப் பட்டது.தீர்ப்பில் நீதிபதிகள் கூறி உள்ளதாவது:

இந்த வழக்கில், ஆர்காம் தலைவர்,அனில் அம்பானி, 'ரிலையன்ஸ் டெலிகாம்' தலைவர், சதீஷ் சேத், 'ரிலையன்ஸ் இன்ப்ராடெல்' தலைவர், சய்யா விரானி ஆகியோர், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில், ஆர்காம் நிறுவனம் ஏற்கனவே, நீதி மன்றத்தில் கொடுத்துள்ள, 118 கோடி ரூபாயை, ஒரு வாரத்துக்குள், எரிக்சன் இந்தியா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.

மீதமுள்ள நிலுவைத் தொகை மற்றும் அதற்கான வட்டி என, ரூ.453 கோடியை, நான்கு வாரத்துக்குள், எரிக்சன் இந்தியா நிறுவனத்துக்கு,ஆர்காம் நிறுவனம் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கா விட்டால், அனில் அம்பானி உட்பட மூவரும், தலா, மூன்று மாதம் சிறையில் அடைக்கப்படுவர்.இதைத் தவிர, நீதிமன்ற அவமதிப்புக்காக, தலா, 1 கோடி ரூபாயை, நான்கு வாரத்துக்குள், நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அவகாசம்அவ்வாறு செலுத்தாவிட்டால், இவர்கள், தலா, ஒருமாதம் சிறை தண்டனையை, கூடுதலாக அனுபவிக்க வேண்டும்.நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்ட பின், குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்துவதாக, ஆர்காம் நிறுவனம் உறுதி அளித்திருந்தது.

முதலில், 120 நாட்கள் அவகாசமும், பின், 60 நாட்கள் கூடுதல் அவகாசமும் அளிக்கப்பட்டது. ஆனால்,

Advertisement

நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தனது வாக்குறுதியை, இந்த நிறுவனம் மீறியுள்ளது உறுதியாகி உள்ளது.நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை இவர்கள் செய்துள்ளனர். அதனால், இவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டா லும், அதை நீதிமன்றம் ஏற்காது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

தீர்ப்பு அளிக்கப்படுவதையொட்டி, அனில் அம்பானி உள்ளிட்டோர், நீதிமன்றத்தில், நேற்று ஆஜராயினர்.தீர்ப்பு அளிக்கப்பட்ட பின், அனில் அம்பானி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி கூறியதாவது: நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, ரிலையன்ஸ் நிறுவனம், நிலுவைத் தொகையை செலுத்து வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் என, நம்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிமன்றத்தில், அனில் அம்பானி கூறியதாவது:எரிக்சன் நிறுவனத்துக்கான நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஆர்காம் நிறுவனத்தின் சொத்துக்களை, என் சகோதரர், முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விற்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.அதையடுத்து, திவால், 'நோட்டீஸ்' கொடுத்து உள்ளோம். அதனால், எரிக்சன் நிறுவனத்துக்கு நிலுவை தொகையை தர முடியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-பிப்-201900:12:37 IST Report Abuse

Pugazh Vந.நா.முனி (சொந்தப் பேரில் எழுது__(டா) ____ என்று ஒரு பாஜக வாசகர் வேறோருத்தருக்கு எழுதியது நினைவுக்கு வருகிறது. வி.மல்லையாவுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பினது மோ__ யின் சாதனை என்று சங்கிகள் சங்கு ஊதினப்போ..நீங்கள் மட்டையாயிட்டீங்களா? ரயிலில் கக்கூஸ் ல தண்ணி வந்தாலே மோ___ அரசின் சாதனை என்று கூவுவீங்க. அனில்அம்பானிக்கு கோர்ட் கெடு குடுத்ததைப் பார்த்து தாங்க முடியவில்லை ,உங்களுக்கு இல்லையா?

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
21-பிப்-201919:33:24 IST Report Abuse

Nakkal Nadhamuniதேச விரோதிகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்... அது முடியாது போல இருக்கு... மோடி அம்பானியை ஆதிரிக்கிறார் என்றால், மோடி ஆட்சியில் அம்பானிக்கு ஆதரவா தானே தீர்ப்பு வந்திருக்கணும்...ஒண்ணு மோடி கோர்ட் விஷயங்களில் தலையிட முடியாது என்பதை ஒத்துக்கணும்.. இல்லேன்னா மோடி அம்பானியை ஆதரிக்கவில்லையென்று ஒதுக்கணும்... புரியலப்பா... அதுனாலதான் அவங்க தேச விரோதியா இருக்காங்க போல இருக்கு, நியாயமே தெரியாத பசங்க...

Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
21-பிப்-201918:41:50 IST Report Abuse

sankaseshanமுதலில் சிதம்பரம் செட்டியார் அவரது மகன் கார்த்திக்கின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜெயிலில் போடுங்கள் நீதிமன்றம் பாரபட்சம் கட்டக்கூடாது

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X