'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்!'ஸ்டாலின் நம்பிக்கை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'பிரதமர் யார் என்பதை தி.மு.க.,
சுட்டிக்காட்டும்!'ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை:''தி.மு.க., சுட்டிக்காட்டக் கூடிய ஒருவர், பிரதமர் ஆவார்,'' என,ஸ்டாலின் பேசினார்.

'பிரதமர், யார், என்பதை,தி.மு.க., சுட்டிக்காட்டும்!,'ஸ்டாலின் நம்பிக்கை

இடைத்தேர்தல்தி.மு.க., சார்பில், தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம், பூந்தமல்லியில் நேற்று நடந்தது. இதில், கட்சித் தலைவர், ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., நடத்திய, கிராம சபை கூட்டத்தின் பயணம், 99 சதவீதம் முடிந்து விட்டது.

மே மாத இறுதியில், நாம் எதிர்பார்த்தது போல், தி.மு.க., சுட்டிக்காட்டக் கூடிய ஒருவர், பிரதம ராவார்.லோக்சபா தேர்தலுடன், 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைதேர்தல் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.எதிர் தரப்பில் அமைந்து உள்ள கூட்டணி செய்தியை பார்த்தால்,

ஏதாவது ஒரு உறுதிமொழியை, தமிழக அரசுக்கு, மத்திய அரசு தந்திருப்பதாக தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும், லோக்சபா தேர்தலோடு, ஒட்டுமொத்த சட்டசபைக்கும் தேர்தல் வராதா; தி.மு.க., வெற்றி பெறாதா; அதன் வாயிலாக, பிரச்னைகள் தீராதா என்ற ஏக்கத்தோடு, தமிழக மக்கள் காத்திருக்கின்றனர்.கிராம சபைதி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக வரப் போகிறது என்ற நம்பிக்கையில், கிராம சபை கூட்டத்திற்கு, மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், திட்டங்களை தீட்டுவது, மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதுடன், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டோர், சிறையில் அடைக்கப்படுவதும் நடக்கும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

பா.ம.க., மீது மீண்டும் பாய்ச்சல்



பூந்தவல்லி மேற்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், ஊராட்சி சபை கூட்டம், ஜமீன் கொரட்டூர் கிராமத்தில், ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

Advertisement

ஸ்டாலின் பேசியதாவது:தகுதி நீக்கம் செய்யப் பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகள், அனாதையாக உள்ளன. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சேர முக்கிய காரணம், ஊழல் வழக்குகள் தான். அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., - பா.ம.க., போன்ற கட்சிகள், கூட்டணி சேர்ந் தாலும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறும்.

அ.தி.மு.க., ஊழல் பட்டியலை, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், புத்தகமாக வெளி இட் டார். ஆனால், இன்று, ஏதோ ஒரு ஆசை யில், அதே கட்சியுடன், கூட்டணி சேர்ந்து, லோக்சபா தேர்தலை சந்திக்கிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22-பிப்-201917:11:02 IST Report Abuse

Swaminathan Chandramouliஎங்கேயாவது வீரமணியை சுட்டிகாட்டப் போகிறார் சுடாலின்.

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
21-பிப்-201922:10:43 IST Report Abuse

S.Ganesanஇந்திய பிரதமரை ஜப்பான் துணைமுதல்வர் நியமிக்க முடியுமா ?

Rate this:
adalarasan - chennai,இந்தியா
21-பிப்-201922:01:03 IST Report Abuse

adalarasanஅடக்கடவுளே...இன்னும் இவங்க கூட்டணியே முடியல...அதற்குள்ளே எதை சுட்டி காட்டுவீங்க…?தங்கட்சி பிரதமர் என்றா???

Rate this:
மேலும் 54 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X