பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சென்னை வழிதடத்தில் விமான தயாரிப்பு ஆலைகள்
ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பெங்களூரு: ''துமகூரிலிருந்து ஓசூர் வழியாக சென்னை செல்லும் வழித்தடம், விமான உற்பத்தி தொழில் வழித்தடமாக மாற்றப்படும். கோவை கொடிசா தொழில்பேட்டை மற்றும் அவரங்காபாத், நாசிக் நகரங்களில் விமான தொழில்பேட்டை துவக்கப்படும்,'' என, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 சென்னை,வழித்தடம், விமான தயாரிப்பு, ஆலைகள்,ராணுவ அமைச்சர் ,நிர்மலா சீதாராமன், தகவல்

பெங்களூரு, எலஹங்கா விமானப்படை தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, 12வது சர்வதேச விமான கண்காட்சியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:சர்வதேச விமான கண் காட்சியில் இம்முறை, ராணுவ துறையுடன், விமான போக்குவரத்து துறையும் கை கோர்த்து உள்ளது.உலக சந்தையில் விமான தொழிலை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கை களை, இந்தியா மேற்கொண்டு உள்ளது. இதனால், விமான தொழிலில் அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தளமாக கண்காட்சி அமையும்.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த நோக்கத்தை நிறை வேற்றும் ஒரு அங்கம் தான், விமான கண் காட்சி.ராணுவ தளவாட உற்பத்தியில் புதிய நிறுவனங்களை அதிக அளவில் துவக்குவதில், உலகளவில், இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

உற்பத்தி, சேவை, தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் ஆகிய துறைகளில் கர்நாடகா

முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, பெங்களூரு முதலிடத்தை பிடித்து வருகிறது.இந்தியாவில் அன்னிய முதலீட்டுக்கு, 49 சதவீதம் மட்டும் அனு மதித்து வருகிறோம். ஆனால், ராணுவ தளவாட உற்பத்தியில், 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால், 4,000 ஹெலிகாப்டர், விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. நேபாளம், மொரிஷியஸ், ரஷ்யா,ஆப்கானிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு விமானங்கள் ஏற்றுமதி செய்து வருகிறோம். 2022 - 23க்குள் ஏற்றுமதியை, 25 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப் பட்டு உள்ளது.

தற்போது, அன்னிய முதலீட்டுக்கான விதிகள் தளர்த்தப்படுகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்கள், தங்கள் ராணுவ தள வாட உற்பத்தியை இந்தியாவில் துவக்க வேண்டும். புதிய சிந்தனை, புதிய உற்பத்திக்கு மத்திய அரசு ஊக்கமளிக்கும். விமான தொழிலில் நல்ல வாய்ப்பு கள் உருவாகின்றன. ராணுவ தளவாடங்கள் தொடர் பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், 1.27 லட்சம் கோடி ரூபாய்க்கான, 150 ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன.

தவிர, கடந்த நான்கு ஆண்டுகளில், 126 உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து, 2.76 லட்சம் கோடி ரூபாய்க்கான ராணுவ தளவாட உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. 2014 - 18ல் ஆறு நிறுவனங்கள் அன்னிய முதலீடு செய்து ராணுவ தளவாடங்கள் தயாரித்தன. இதன் மூலம், 237 கோடி ரூபாய் முதலீடு வந்தது.

ஒவ்வொரு சாதாரண குடிமகனும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்பதே பிரதமரின்கனவு. இதனால் தான் தற்போது கிராமங்களில் வசிக்கும் மக்களும் விமானத்தில் பயணிக்கின்றனர். கர்நாடகத்தின் துமகூரிலிருந்து தமிழகத்தின் ஓசூர் மார்க்கமாக, சென்னை செல்லும் வழிதடம், விமான தயாரிப்பு தொழில் வழித்தடமாக மேம்படுத்தப் படும்.


இதே போன்று உத்தர பிரதேசத்திலும் உருவாக்க

Advertisement

படும்.கோவை கொடிசா தொழில்பேட்டை மற்றும் அவரங்காபாத், நாசிக் நகரங்களில் விமான தொழிற்பேட்டை துவக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விமானம் மற்றும் ராணுவ துறையில், உலகத் தின் கவனத்தை, பெங்களூரு ஈர்த்துள்ளது. தேவனஹள்ளியில் விமான தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மங்களூரில் ராணுவ தொழில்பேட்டை அமைக்கப் படும். கர்நாடகா அன்னிய முதலீட்டுக்கு தகுந்த இடம். முதலீட்டில் இந்திய அளவில் கர்நாடகா முதலிடம் பிடித்திருப்பது பெருமையாக உள்ளது. விமான உற்பத்தி தொழில் துவங்குவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். குமாரசாமி, முதல்வர், மதசார்பற்ற ஜனதா தளம்விமான போக்குவரத்திலும் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உதான் திட்டத்தின் கீழ் நாட்டின்,203 பகுதிகளுக்கு விமானங் கள்இயக்கப்பட்டு வருகின்றன; இது, 10 - 15 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இந்தியாவுக்கு, 2,000க்கும் அதிகமான பயணியர் போக்குவரத்து விமானங்கள் தேவைப்படுவ தால், இது போன்ற கண்காட்சி உதவியாக இருக்கும். சுரேஷ் பிரபு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், பா.ஜ.,Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-201915:16:11 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்பிஜேபி சத்தமில்லாமல் மக்களை வளைத்துக் கொண்டிருக்கிறது , இளைஞர்கள் அனைவரும் வேலை , தொழில் செய்ய உதவும் பிஜேபிக்கு ஆதரவளிக்கிறார்கள். இங்கே சுடாலின் நான் கைகாட்டுபவர் தான் அமெரிக்கா அதிபர் , ஐநா சபை தலைவர் என்று உளறிக்கொண்டிருக்கிறார்.

Rate this:
rambo - Manamadurai,இந்தியா
21-பிப்-201919:07:28 IST Report Abuse

ramboஅட போங்க சார் சும்மா காமெடி பண்ணிக்கிட்டு.. ...

Rate this:
venkat - chennai,இந்தியா
21-பிப்-201910:05:47 IST Report Abuse

venkat// கர்நாடகத்திலிருந்து தண்ணீர் தந்தா போதும். // இதை கர்நாடக முந்திய காங்கிரஸ் மற்றும் தற்போதை காங்கிரஸ் கூட்டு ஆட்சியிடம் கேட்க வேண்டும். இப்பிரச்சினை மத்திய பி ஜெ பி nda அரசு கையில் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவேரி ஆணையத்திற்கு சென்று விட்டது. நீண்டகாலத் தீர்வாக, பி ஜெ பி nda அமைச்சர் கட்கரி ரூ 100000 கோடி செலவில், 90 சதவிகிதம் மத்திய அரசு பங்களிப்புடன் கோதாவரி கிருஷ்ணா பெண்ணாறு காவேரி நதிகள் இணைப்புக்கு ஆந்திராவின் சம்மதம் பெற்று, தெலுங்கானா சம்மதத்திற்கு காத்திருக்கிறார். டெல்லி சென்ற நமது விவசாயத் தலைவர்கள், அரசியல் தலைகள், ஹைதெராபாத் சென்று விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100TMC வருடத்திற்கு நமக்கு கிடைக்கும்.

Rate this:
21-பிப்-201909:46:07 IST Report Abuse

வெற்றிக்கொடி கட்டு அம்மணி ரொம்ப நன்றிங்கோ ஏன் எல்லா தொழிற்சாலையும் எங்களுக்கே கொடுத்து திக்கு முக்காடவைக்கிறீர்கள், ஏன் நீங்கள் STERLITE ஆலையை முக்கியமான ஆலையை MODI பிறந்த ஊரான குஜராத்தில் கொண்டு போய் வையுங்களேன் நாங்கள் தான் வேண்டாம் என்கிறோம் அதேமாதிரி ஏதேன் மெதேன் எல்லாம் உங்கள் ஊரில் வையுங்கள் வேணாம் என்று சொல்லும் எங்களிடம் ஏன் திணிக்கிறீர்கள் இங்கே ஒரு ஜெயா கலைஞர் போன்ற ஆளுமை இல்லை என்பதால் குளிர் விட்டு போச்சு உங்களுக்கு

Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
21-பிப்-201911:58:32 IST Report Abuse

Sivramkrishnan Gkஏதேன் மெதேன், STERLITE பாஜகவா கொண்டு வந்தது. மீதேனுக்கு தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொன்னவனை கேள்வி கேளுங்கள். ...

Rate this:
21-பிப்-201914:54:28 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்திமுக முடியட்டும் தமிழகம் விடியட்டும் , இங்கே வேலை வாய்ப்பில்லாமல் பல லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள் , அவர்களுக்கு வேலை மற்றும் தொழில் செய்ய வாய்ப்பு வேண்டும். உங்களைப்போல கூலிக்கு கருத்துப்போட்டு சம்பாதிக்க முடியாது. ...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X