பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை
சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் கடும் எதிர்ப்பு

புதுடில்லி:''காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது பகுதியில், புதிய அணை கட்டுவதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வாதிட்டது.

மேகதாது, கர்நாடகா புதிய அணை,  சுப்ரீம் கோர்ட், தமிழகம் கடும் ,எதிர்ப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது பகுதியில், புதிய அணை கட்டுவதற்கு, கர்நாடகா திட்ட மிட்டு உள்ளது. இது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.


இதை எதிர்த்து, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதிகள், ஏ.எம். கன்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வு இதை விசாரிக்கிறது. இந்த வழக்கில், தமிழக அரசு தனது வாதத்தை நேற்று, முன் வைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த

நிலையில், தங்கள் தரப்பு வாதத்தை எழுத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கை மூன்று வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

நேற்று நடந்த விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டதாவது: காவிரி நீரை பகிர்ந்து கொள்வது குறித்து, உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு, பிப்., 12ல் தீர்ப்பு அளித்தது. அதன்படி, நீரை பகிர்ந்து கொள்வதற்காக, விரிவான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, மேகதாது பகுதியில், புதிய அணை கட்டுவதற்கு, கர்நாடகா திட்டமிட்டுள்ளது.


இது தமிழகத்தில்உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். தமிழகத் துக்கு உரிய நீரைத் தராமல், தனது தேவைக்காக தேக்கி வைக்கவே, புதிய அணை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. புதிய அணை கட்டுவதற்கான, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு, மத்திய நீர்ஆணையம், அனுமதி அளித்துள்ளது.


இது தொடர்பாக, கடந்தாண்டு நவம்பரில் அனுப்பிய கடிதத்தில், 'தமிழகம் உள்பட இந்தப் பிரச்னையில் தொடர்புடைய மாநிலங்களின் அனுமதியைப் பெற வேண்டும்' என, மத்திய நீர் ஆணையம் கூறி உள்ளது.ஆனால், இதுவரை, கர்நாடக அரசு

Advertisement

அனுமதி கேட்கவில்லை. ஆனால், விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்து விட்டதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.


இது, காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் கடிதத்துக்கு எதிரானது. அதனால், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடகாவுக்கு அனுமதி அளித்து, மத்திய நீர் ஆணையம் அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெற உத்தர விட வேண்டும். மேலும், கர்நாடகா தாக்கல் செய்துள்ள,விரிவான திட்ட அறிக்கையை ஏற்கக் கூடாது என்றும் உத்தர விட வேண்டும்.இவ்வாறு தமிழக அரசு வாதிட்டது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-பிப்-201913:56:00 IST Report Abuse

D.Ambujavalliநேற்று பாமக ஒப்பந்தத்தின்படி நாங்களும் குரல் கொடுத்து விட்டோம் என்று அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு மாயையை ஏற்படுத்தும் நாடகம்தான் இது

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-பிப்-201908:41:24 IST Report Abuse

Srinivasan Kannaiyaகத்தி பார்ப்போம்... ஏதாவது நடக்கிறதா பார்ப்போம்...

Rate this:
rajan. - kerala,இந்தியா
21-பிப்-201908:04:46 IST Report Abuse

rajan.  இப்படி தண்ணீரை வைத்து கோர்ட்டு கேஸுன்னு அலையற நேரத்திலே இன்னிக்கு வரை காவிரியில் தடுப்பணை கட்டும் திட்டம் பத்தி ஆலோசிங்க சாமிகளா. நமக்கு கிடைக்கும் நீரை சேமிக்க வழிய பார்க்க இன்னும் ஒரு வழியும் பிறக்க வில்லை. ஏன்னா தான் விட்டு ஆத்துறானுங்களோ இவனுங்க.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X