பதிவு செய்த நாள் :
பயங்கரவாதிகளின் சொர்க்கம் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: ஒரேநாளில் சுதந்திரம் பெற்றவை இந்தியாவும் பாகிஸ்தானும். இந்தியா நிலவுக்கு ஆட்களை அனுப்ப திட்டமிடுகிறது. பாகிஸ்தான் பிற நாடுகளுக்கு பயங்கரவாதிகளை அனுப்புகிறது என அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் சுற்றி வருகின்றன.

 பயங்கரவாதிகளின்,சொர்க்கம்,பாகிஸ்தான்

இந்தியா மட்டுமின்றி ஈரான் உள்ளிட்ட சில அரபு நாடுகளும் பாகிஸ்தான் பயங்கரவாதி களால் பாதிக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் புல்வாமா தாக்குதல் நடந்த மறுநாளே ஈரான் எல்லையிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானை பொறுத்தவரை எந்த அரசு அமைந்தாலும் அவர்களால் ராணுவத்தையும், அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யையும் மீறி செயல்பட்டமுடியாது.

பாவம் இம்ரான்!தற்போதைய பிரதமர் இம்ரான்கான் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியாவின் முன்னேற் றத்தை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானையும் அதுபோல மாற்றுவேன் என குறிப்பிட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரால் அது போன்று செயல்பட முடியவில்லை. ராணுவத்தின் ஆதரவுடன்தான் அவர் அரியணையில் இருக்கிறார். எனவே அவர்கள் கைப்பாவையாக பொம்மலாட்டம் ஆடுகிறார்.

புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்--இ-முகம்மது (ஜெ.இ.எம்) இயக்கம் காரணம் என்பதற்கான ஆதாரத்தை இந்தியா தரவில்லை என அவர் பேசியதை கேட்ட உலகம் அவரின் நிலையை எண்ணி வருத்தப்படவே செய்தது. காரணம், நாங்கள் தான் செய்தோம்' என வீடியோ வெளியிட்டு, முறையாக அந்த இயக்கம் அறிவித்தபின்னும், இந்தியாவிடம் அவர் ஆதாரம் கேட்டது கேலிக்கூத்தானது.


பாகிஸ்தானில் உள்ள ஜெ.இ.எம். இயக்கம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதை சுட்டிக்காட்டி பேசுங்கள்' என அதிகாரிகள் கூறியதை அப்படியே 'டிவி'யில் ஒப்பித்தார் இம்ரான்.

ராணுவமே ஆட்சிமுழு மெஜாரிட்டி பெற்ற அரசாக இருந்தாலும்

கூட பாகிஸ்தான் ராணுவம் நினைத்தால் அடுத்த நொடியே அரசு கவிழ்ந்துவிடும். பிரதமரும், அதிபரும் கைது செய்யப்படுவர். பாகிஸ்தான் சரித் திரத்தில் முழுமையாக பதவிக்காலத்தை பூர்த்தி செய்த அதிபர்கள், பிரதமர்கள் மிகவும் குறைவு. இயற்கை மரணம் அடைந்த தலைவர்களும் குறைவு. அந்த அளவிற்கு படுகொலைகள் அங்கு அதிகம்.


இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் ஐ.எஸ்.ஐ.யின் அதிகாரம் அங்கு கொடிகட்டி பறக்கிறது. மிக கடுமையான பொருளாதார நெருக்கடி இருக்கும் நிலையில் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல் களால் உறுதியாகியுள்ளது.

உதவிய அரசு நாடுகள்பின்லேடன் பிரச்னைக்குப் பிறகு அமெரிக்காவின் நிதியுதவி ஏறக்குறைய நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அரபு நாடுகளிடம் கையேந்தியது. சவுதி உடனடியாக நிதியுதவியை வழங்கியது. 2 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடியையும், அதே தொகைக்கு நிதியையும் சவுதி அரேபியா வழங்கியது. இதன் பிரதிபலனாக பாகிஸ்தான்
வந்த சவுதி இளவரசருக்கு கார் ஓட்டி தனது நன்றிக்கடனை செலுத்தினார் இம்ரான்.


மற்றொரு அரபு நாடான கத்தாரும் 1.5 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பின் உலக நாடுகள் பலவும் இந்தியாவின் பின் அணிவகுத்து நிற்கின்றன. வழக்கம் போல் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகஉள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் பேச்சு நடத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆதரவு தேவை. அதனால் கடுமையாக கண்டிக்கவில்லை. அதே சமயம் ஐ.நா. மூலம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் பாகிஸ்தானில் செயல் படும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

தீவிரவாதிகளின் சொர்க்கம்பாகிஸ்தானின் பகவல்பூரிலிருந்து மசூத் அசாரின் ஜெ.இ.எம்., இயங்குகிறது. பின்லேடன், மசூத் அசார் மட்டுமின்றி உலகம் முழுவதும் தேடப்படும் பயங்கரவாதிகளான கலித் ஷேக் முகமது, அபூ சுபைதா, யாசர் ஜசீரி, அபு பரஜ் அல்லிபி, ரம்ஜி பின் அல் ஷிப், உமர் பதேக் ஆகியோர் பாகிஸ்தானில் தான் பிடிபட்டனர். இது அமெரிக்காவிற்கும் ஐ.நா.விற்கும் நன்றாக தெரியும்.

அப்துல் அகமது துர்க், அப்துல் அஜீஸ் உள்ளிட்ட தலிபான்கள், எகிப்தைச் சேர்ந்த அப்த் அல்லா, ஜேசி அகமது, ஐமன் அல் ஜவாஹிரி, அல்கொய்தா உறுப்பினர் பஜீல் அதுல், ஈராக்கைச் சேர்ந்து அப்த் அல் ரஹ்மான், குவைத் பயங்கரவாதி அபோ கைத்,

Advertisement

உஸ்பெகிஸ்தான் ஐ.எஸ். பயங்கரவாதி அயூப் பஷீர் ஆகியோர் பாகிஸ்தானில்தான் வாழ்கின்றனர். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அறிக்கைபடியே உலகில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்திருக்கும் நாடு பாகிஸ்தான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இருப்பினும் ஐ.நா. வால் எதுவும் செய்ய முடியவில்லை.

பலனில்லா பயங்கரவாதம்பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் இருந்தாலும் பொருளாதார ரீதியாக அதற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த சிந்தனையே ஏற்படாமல் மழுங்கடிக்கும் விதத்தில் அங்கு தீவிர பிரசாரங்கள் நடக்கின்றன.


இளைஞர்கள் எளிதில் மூளைச்சலவை செய்ய பட்டு பயங்கரவாதி ஆக்கப்படுகின்றனர். ஆனால் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள பயங்கரவாத இயக்க தலைவர்களின் குழந்தைகள் மேற்கத்திய நாடுகளில் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் சிந்தனையிலும் செயல்பாட்டி லும் மாற்றம் ஏற்படாதவரை பல்லில் சிக்கிய முள்ளாகவே உலக நாடுகளுக்கு அது இருக்கும். ஆனால் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை அதற்கான வாய்ப்பு காணப்படவில்லை.

விலகியிருக்க வேண்டுகோள்புல்வாமா தாக்குதலுக்குப்பின் உலக நாடுகளின் வற்புறுத்தல் அதிகமானதையடுத்து பயங்கர வாத தலைவர்களை தலைமறைவாக இருக்கு மாறு பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீது, ஜெ.இ.எம். தலைவர் மசூத் அசார் ஆகி யோரை சில மாதங்களுக்கு பொது நிகழ்ச்சி களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு நாங் கள் பொறுப்பேற்கிறோம் எனக்கூறும் நீண்ட வீடியோவை ஜெ.இ.எம். வெளியிட்டுள்ளது. இது இம்ரான்கானுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-பிப்-201915:19:17 IST Report Abuse

Endrum Indianஒரேநாளில் சுதந்திரம் பெற்றவை இந்தியாவும் பாகிஸ்தானும்? தவறு ஒரு நாளுக்கு முன்னாலே சுதந்திரம் பெற்றது பாகிஸ்தான் (14-08-1947 ) நாம் சுதந்திரம் பெற்றது 15-08-1947.

Rate this:
21-பிப்-201910:14:16 IST Report Abuse

ஆப்புஅங்கே மொதல்ல போயிட்டுதான் இங்கே வந்த சவுதி இளவரசர் மோடிய கடிப் புடுச்சு பயங்கர வாதத்தை ஒழிப்போம்னு பேசுறாரு

Rate this:
Srinivas - Chennai,இந்தியா
21-பிப்-201912:49:00 IST Report Abuse

Srinivasஅவர் சொன்னது பொய் என்பது இந்தியாவிற்கு நன்றாகத்தெரியும். தீவிரவாதி பக்கி நாட்டிற்கு பண உதவி செய்யும் ஒரு இஸ்லாமிய நாடு அவன் செய்யும் தீவிரவாத செயலை ஒழிக்க இந்தியாவுடன் ஒத்துழைப்போம் என்று சொல்வது கடைந்தெடுத்த பொய் என்பது மற்ற நாடுகளுக்கும் தெரியும். ...

Rate this:
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
21-பிப்-201915:31:03 IST Report Abuse

Idithangi என்ன செய்யறது தான் கேவல பட்டாவது தன் மதத்தவருக்கு உதவ நினைக்காது சவூதி . எல்லாம் மதம் படுத்தும் பாடு. நம்ப ஊர் அரேபிய அடிமைகள் இதை பத்தி எல்லாம் வாயே திறக்க மாட்டாங்க. ரோஹிங்கிய பாலசுதீனம் சேவ் சிரியா ன்னா முன்ன நிப்பாங்க. ...

Rate this:
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
21-பிப்-201909:40:25 IST Report Abuse

T M S GOVINDARAJANஇந்தியாவில் தேசவிரோத சக்திகள் அதிகமாக இருக்கிறது அதுவும் தமிழகத்தில் குறிப்பாக ஒருவர் இருக்கிறார் அவர் ஒரு பேருக்கு துண்டு கட்சியாக அவருடைய பேட்டியை ஒரு வீடியோவில் பார்த்தேன் அதில் பிரான்ஸ் நாட்டில் எதற்காக ரபேல் வாங்குகிறார்கள் ஒன்றுமில்லை பாகிஸ்தான்காரன் அப்பாவி அவனை மிரட்டுவான் இந்தியன் ஆனால் சைனா காரன் லடாக் வந்துவிட்டால் பேசித் தீர்ப்போம் என்று கூறி விடுவான் ஏனென்றால் அவனிடம் உண்மையான ராணுவம் இருக்கிறது சீனாக்காரன் குடியரசு தினம் அணிவகுப்பு என்று எதுவும் நடத்த மாட்டான் ஆனால் அவனிடம் இருப்பது உண்மையான ராணுவம் அப்படி இருக்கும்போது இந்தியா எப்படி செயல்படுவான் பிறகு பாகிஸ்தானை பெருமையாக பேசுகிறார் எப்படி என்றால் உலகத்திலேயே அப்பாவியாக இருப்பவனை தான் இந்திய காரன் அடிப்பான் என்று பிறகு நக்கலாக ஒரு சிரிப்பு வேறு இப்படிப்பட்ட பதிவை உளவுத்துறை எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை ஜனநாயகம் என்றால் தன் தாய்நாட்டை இவ்வளவு இழிவாக பேசி அதுவும் ஊடகத்தின் வாயிலாக ஆச்சரியமாக இருக்கிறது இப்படிப்பட்ட தேசவிரோதிகள் இந்தியாவில் இருக்கும் போது வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு ஏன் இந்தியாவை தாக்க மாட்டார்கள் முதலில் இது போன்ற தேச விரோதிகளை களை எடுத்தாலே நம் நாடு சுபிட்சம் ஆகிவிடும் வாழ்க ஜனநாயகம்

Rate this:
Gopal - Jakarta,இந்தோனேசியா
21-பிப்-201914:35:46 IST Report Abuse

Gopalஇது முற்றிலும் உண்மை. சீமானை மொதல்ல தேச துரோகி சட்டத்தில் பிடித்து வெளியே வரமுடியாத அளவுக்கு வைக்கவேண்டும். ...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X