30 அறைகள், 50 குடிமக்கள்: உலகின் மிகச்சிறிய நாடு

Added : பிப் 21, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
சீலேண்ட், பிரிட்டனுக்கு வட பகுதியில் அமைந்துள்ளது உலகின் மிகச் சிறிய நாடான சீலேண்ட். இந்நாடு கடல் மீது ஒரு கட்டடத்தின் மீது உள்ளது என்றால் ஆச்சரியமடைவீர்கள். ஆனால் இது உண்மை.பிரிட்டனின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்குட்டி நாடு. இரண்டாம் உலகப் போர் துவங்கிய போது 1942ல் பிரிட்டிஷ் அரசு கடலில் இரும்பால் வலுவான ஒரு
30 அறைகள், 50 குடிமக்கள்: உலகின் மிகச்சிறிய நாடு

சீலேண்ட், பிரிட்டனுக்கு வட பகுதியில் அமைந்துள்ளது உலகின் மிகச் சிறிய நாடான சீலேண்ட். இந்நாடு கடல் மீது ஒரு கட்டடத்தின் மீது உள்ளது என்றால் ஆச்சரியமடைவீர்கள். ஆனால் இது உண்மை.பிரிட்டனின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்குட்டி நாடு. இரண்டாம் உலகப் போர் துவங்கிய போது 1942ல் பிரிட்டிஷ் அரசு கடலில் இரும்பால் வலுவான ஒரு குட்டித் துறைமுகத்தைக் கட்டியது. போரில் பயன்படுத்தப்படும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இத்துறைமுகத்தை பயன்படுத்தினர்.போர் முடிந்த பின், 'ரப் டவர்' எனப் பெயரிடப்பட்டு, 1956- வரை இத்துறைமுகத்தை பிரிட்டிஷார் பயன்படுத்தினர். பின், காலப்போக்கில் அப்படியே விட்டுவிட்டனர்.முன்னாள் ராணுவ அதிகாரியான ராய் பேட்ஸ் தன் குடும்பத்துடன் 1967ல் இங்கு வந்து தங்கியவர், இந்த இடத்திற்கு 'பிரின்ஸிபாலிட்டி ஆப் சீலேண்ட்' என்று பெயர் வைத்தார்.தனி நாடு: பிரிட்டன் அதிகாரிகள் சீலேண்டிலிருந்து ராய் பேட்ைஸ அப்புறப்படுத்த எவ்வளவோ முயன்றனர். அவர் பிடிவாதமாக வெளியேற மறுத்தார். அதனால், இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது.ஆனால், இந்த குட்டி துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறி விட்டது. இதன்பிறகே, ராய் பேட்ஸ் 1975-ல் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார். இந்த நாட்டுக்கென கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அனைத்தையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.ஒரு முறை ராய் பேட்ஸ் தன் குடும்பத்தாருடன் இங்கிலாந்து சென்றிருந்த போது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்நாட்டை ஆக்கிரமித்தனர். பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் அவர்களுடன் போரிட்டு இந்நாட்டை மீட்டனர். பிரிட்டன் அரசு 1987 ல் கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயன்றது. ஆனாலும் முடியவில்லை.சீலேண்டின் இளவரசராக தன்னை அறிவித்துக் கொண்ட ராய் பேட்ஸ், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தற்போது இக்குட்டி நாட்டிற்கு பேட்ஸின் மகன் மைக்கேல் இளவரசராக பதவி வகிக்கிறார். இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இக்குட்டி நாட்டில் வசிக்கின்றனர். இந்த கட்டடத்தில் 30 அறைகள் உள்ளன. இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்து வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
26-பிப்-201916:53:57 IST Report Abuse
INDIAN Kumar ஆச்சரியம் ஆனால் இது உண்மை
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-பிப்-201905:42:55 IST Report Abuse
 nicolethomson இந்த மாதிரி லூசு தனத்தையெல்லாம் வெள்ளை காரனுங்க தான் செய்வானுங்க
Rate this:
Cancel
G.Sivasubframanian - karur,இந்தியா
22-பிப்-201921:50:50 IST Report Abuse
G.Sivasubframanian ஜீவனத்துக்கு என்ன செயகிறார்கள். அன்றாட உபயோகப்பொருட்கள் எந்த நாட்டில் இருந்து வாங்குகின்றார்கள். ஒன்றுமே சொல்லாமல் கட்டுரையை முடித்து விட்டார்களே.?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-பிப்-201914:58:19 IST Report Abuse
தமிழவேல் 20 கிமீ தூரம் இல்லை. தேவைப்படும்போது வாரம் ஒருமுறை போட்டில் சென்று வாங்கிக் கொள்ளலாம். ஜீவனத்துக்கு ? இது பெரிய கேள்வி. லலித் மோடி, நீரவ் மோடி, மல்லையா +++........... போன்றவர்கள் காசை கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X