கோடை கால மின் தேவை இப்போதே வாரியம் கவலை Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கவலை!
கோடை கால மின் தேவை
இப்போதே வாரியம் கவலை

மின் தேவை, தற்போதே, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியதால், கோடை வெயிலால் அதிகரிக்க உள்ள மின் தேவையை நினைத்து, மின் வாரியம் கவலை அடைந்துள்ளது.

 கோடை கால, மின் தேவை,இப்போதே,வாரியம்,கவலை

தமிழகத்தில், தினசரி மின் தேவை, சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. இது, கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில், மேலும் அதிகரிக்கும். அதன்படி, 2018 ஏப்ரல், 27ம் தேதி இரவு, 7:05 மணிக்கு, மின் தேவை, 15 ஆயிரத்து, 440 மெகா வாட்டாக

அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவு.வரும் கோடை காலத்தில், வெயிலுடன், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, லோக்சபா தேர்தல்நடக்க உள்ளன.

இதனால், மின் தேவை, 16 ஆயிரம் மெகா வாட்டை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், இம்மாதம், 19ம் தேதி இரவு, 7:05 மணிக்கு, மின் தேவை, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டி, 15 ஆயிரத்து, 117 மெகா வாட் என்றளவை எட்டியுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வரும் ஏப்ரல், மே மாதங்களில், மின் தேவையை பூர்த்தி செய்ய, முழு மின் உற்பத்திக்கு எரிபொருள், மின் கொள்முதல் போன்ற அனைத்து ஏற்பாடுகளும்

Advertisement

தயார் நிலையில் உள்ளன.அப்போது, காற்றாலை மின்சாரமும் கிடைக்கும். கோடை காலம் துவங்க,இரு மாதங்கள் உள்ளன. ஆனால், தற்போதே, வெயில் சுட்டெரித்து வருவதால், மின் தேவை, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியுள்ளது. இதனால், முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-பிப்-201900:04:13 IST Report Abuse

Pugazh V"தமிழகத்தை ஆண்டு வரும் திராவிடன்கள் இது வரை மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை... // மிகவும் தவறான பொய்யான தகவல் இது. 1. இப்படி இனவெறி பிடித்து அலையும் இவர் தேசதுரோகி. 2. காமராஜர் என்கிற.திராவிடனை திட்டறார் போல.3. தமிழக த்தில் 7 மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. ஏழுமே திமுக ஆட்சி க் காலத்தில் உருவாக்கப்பட்டவை. எந்த இணையதளத்தில் வேண்டுமானாலும் பார்க்க. 3. திராவிடன் என்று எழுதும் நீங்கள் ஆரியப்பதராகத் தான் இருக்க வேண்டும். உங்கள் கேடுகெட்ட இனவெறி மற்றும் ஜாதிவெறி, ஊழல் நிரூபணமான கும்பல்களான பாஜக+ அதிமுக கும்பலுக்கு காவடி தூக்க றதை நிறுத்துங்கள். இனவெறியைத் தூண்டாதீர்கள்.

Rate this:
21-பிப்-201920:15:20 IST Report Abuse

ஆப்புஅதெல்லாம் எங்களுக்கு தெரியாது. ஒரு கம்பத்தை நட்டு ஒயர் இணைப்புதான் குடுப்போம். அதுல கரண்ட் வரலைன்னா மோடி அய்யா பொறுப்பாக மாட்டாரு.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-பிப்-201911:32:20 IST Report Abuse

Pugazh Vஎதுக்கு கவலை? சுடலை, பப்பு, காண்கிற ஊழல் திமுக என்று எதையாச்சும் எழுத வேண்டியது தானே. எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக வை குறை சொல்லி எழுதினால் போச்சு எவன் யோசிக்கப் போகிறான்?

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X