ராமஜென்ம பூமி வழக்கு பிப்.26ல் விசாரணை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ராமஜென்ம பூமி வழக்கு பிப்.26ல் விசாரணை

Updated : பிப் 21, 2019 | Added : பிப் 21, 2019 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி 'அயோத்தியில் ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் 26ல் நடக்கும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி ராம ஜென்ம பூமி பிரச்னை தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ல் தீர்ப்பளித்தது.பிரச்னைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகள் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.



இந்த மனுக்களை விசாரிப்பதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட், யு.யு. லலித் அடங்கிய அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது. 'இந்த அமர்வு ஜன. 10ல் விசாரிக்கும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் அயோத்தி விவகாரத்தில் இதற்கு முன் நடந்த விசாரணைகளின்போது ஆஜராகி உள்ளதால் இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித் வெளியேறினார்.இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நசீர் ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டது.'இந்த அமர்வு முன் ஜன. 29ல் விசாரணை நடக்கும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நீதிபதி பாப்டே வராததால் ஜன. 29ல் நடக்க இருந்த விசாரணை ரத்து செய்யப்பட்டது.'அயோத்தி வழக்கு விசாரணை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் வரும் 26ம் தேதி நடைபெறும்' என உச்ச நீதிமன்றம்அறிவித்துள்ளது.



வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-201912:50:12 IST Report Abuse
ஆப்பு ஸ்ரீராமா...
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-201912:50:05 IST Report Abuse
ஆப்பு ஸ்ரீராமா... எல்லோருக்க்ய்ம் நல்ல ஆரோக்கியத்தை குடுப்பா...
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-201912:50:03 IST Report Abuse
ஆப்பு ஸ்ரீராமா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X