அன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு

Updated : பிப் 21, 2019 | Added : பிப் 21, 2019 | கருத்துகள் (18)
Advertisement

புதுடில்லி : நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டின், ஏப்ரல் - டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 7 சதவீதம் சரிவடைந்து, 3,349 கோடி டாலராக, அதாவது, 2.34 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.



இது, 2017 -- 18ம் நிதியாண்டில், 3,594 கோடி டாலர், அதாவது, 2.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், சேவைகள் துறை அதிகபட்சமாக, 591 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது.அடுத்து, கணினி சாப்ட்வேர், ஹார்டுவேர், 475 கோடி டாலர்; தொலை தொடர்பு, 229 கோடி டாலர்; வர்த்தகம், 233 கோடி டாலர்; ரசாயனம், 605 கோடி டாலர்; வாகனம், 181 கோடி டாலருடன் இடம் பெற்றுள்ளன.

அன்னிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் மேற்கொண்ட நாடுகளில், சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், மொரீஷியஸ், நெதர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை உள்ளன.


அன்னிய நேரடி முதலீடு குறைந்தால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். மேலும், அன்னிய செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.





வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-201912:48:09 IST Report Abuse
ஆப்பு கொரியாவுக்கு போயிருக்காரு...கோடி கோடியா முதலீடு வரப்போகுது.... குடு..குடு...குடு...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-பிப்-201911:10:00 IST Report Abuse
Pugazh V அன்பர்களே உங்கள் பாஜக கட்சியின் பொய்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. நாலேமுக்கால் ஆண்டுகளாக நாட்டை நாசமாக்கியது ஆதாரங்களுடன் தெரியவருகிறது. ஆனாலும் மேலும் மேலும் பொய்கள் சொல்லி பாஜக வினர் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதை சொன்னால் நீ போ, பேசாதே, அவன் யோக்கியமா, பாகிஸ்தான், காங்கிரஸ் பப்பு என்று ஏதாச்சும் எழுதுவார்கள்.
Rate this:
Share this comment
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
21-பிப்-201912:44:30 IST Report Abuse
 Muruga Velரொம்ப வருத்த படாதீங்க ..ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் ராகுல் பிரதமரா வந்து நாட்டை வளர்ச்சியடைய செய்வார் .. கனிமொழி T R பாலு ஜெகத்ரக்ஷகன் தயாநிதி மாறன் இவர்கள் மத்திய அமைச்சராக பதவி ஏற்றவுடன் தமிழ்நாடும் வளர்ச்சி பெரும் ..இன்னும் ரெண்டு மூணு மாசம் பல்ல கடிச்சிக்கிட்டு பொழுதை கழியுங்க .....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-பிப்-201911:07:39 IST Report Abuse
Pugazh V அந்நிய முதலீடுகளுக்காக மோடி உலகச் சுற்றுலா சென்ற போது, ஆஹா இந்தியாவின் மதிப்பு உயராது, விமானத்தில் செல்கிற பயணங்கள் கூட உழைப்பு தான். லீவ் எடுக்காதவர்.. ஆ ஊ என்கிறார்கள். இப்போது, எதுக்கு அந்நிய முதலீடாம். அப்புறம் ஏன் நாடு நாடாக சென்று எங்க நாட்டுக்கு வாங்க, தொழில் தொடங்குங்க என்று கெஞ்சினாராம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X