ஜாதவ் வழக்கில் 'அவதூறு பேசும் பாகிஸ்தான்'

Updated : பிப் 21, 2019 | Added : பிப் 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

த ஹேக்: இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாகவும் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்ததாகவும் குற்றஞ்சாட்டி பாக். ராணுவ கோர்ட்டால் 2017ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து நெதர்லாந்தின் த ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அதையடுத்து தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு அளித்தது.



latest tamil news


இந்த வழக்கில் நான்கு நாள் விசாரணை நடந்து வருகிறது. முதல் நாளில் இந்தியா சார்பில் முன்னாள் சொலிசிட்டார் ஜெனரல் ஹரிஷ் சால்வே வாதிட்டார். இரண்டாவது நாளான நேற்று முன்தினம் பாகிஸ்தான் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.நேற்று நடந்த மூன்றாவது நாள் விசாரணையில் ஹரிஷ் சால்வே வாதிட்டதாவது: இந்த வழக்கில் வாதிட்ட பாகிஸ்தான் தரப்பு வழக்கறிஞர் கவார் குரேஷி, இந்தியா குறித்து அவதுாறு வார்த்தைகளை இங்கு குறிப்பிட்டார். இது போன்ற வார்த்தைகளை கூறுவதற்கு இந்தியக் கலாசாரம் என்னை தடுக்கிறது.


latest tamil news



சர்வதேச நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின்போது மிகப் பெரிய ஜனநாயக குடியரசு நாடான இந்தியா குறித்து இவ்வாறு அவதுாறு வார்த்தைகள் கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். வாதங்களின்போது இது போன்று அவதுாறு வார்த்தைகள் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

இந்த வழக்கில் பாக். தரப்பில் இறுதி வாதம் இன்று நடக்க உள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி -  ( Posted via: Dinamalar Android App )
22-பிப்-201902:18:50 IST Report Abuse
மணி பாகிஸ்தான் என்ன மாதிரியான வாதம் செய்தது என்ற விவரம் ஏன் தினமலர் பதிவிடவில்லை?
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-பிப்-201908:09:55 IST Report Abuse
Srinivasan Kannaiya குல்பூஷண் ஜாதவ் விடுதலையாக ஆண்டவன் துணை இருப்பார்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
21-பிப்-201903:58:28 IST Report Abuse
blocked user இந்தியாவின் சார்பிலேயே தீர்ப்பு வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X