அரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு| Dinamalar

அரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு

Updated : பிப் 21, 2019 | Added : பிப் 21, 2019 | கருத்துகள் (101)
Advertisement

புதுடில்லி, ''அரசியல் லாபத்துக்காக, ராணுவத்தை பயன்படுத்துவது, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும். இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது,'' என, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.



ஜம்மு - காஷ்மீரில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது: பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக, நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எல்லைகளில், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, சந்தேகம் எழுப்பி உள்ளார். அவரது கேள்வி குறித்து, நாடு முழுவதும் விவாதங்கள் நடக்கின்றன.



மக்கள் மீதான நம்பிக்கையை, பா.ஜ., இழந்துவிட்டது. அதனால் தான் அவர்கள், சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து, எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளனர். அரசியல் லாபங்களுக்காகவும், சுயநலத்துக்காகவும், ராணுவம் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் திறமையின்மையால், தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை பார்த்து, மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
22-பிப்-201902:40:20 IST Report Abuse
meenakshisundaram இவர்களே தங்கள் சுய லாபத்துக்காக எதையும் செய்யத்துணிந்தவர்கள். இவர்களே எல்லா விஷயங்களிலும் 'அரசியல்'செய்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
21-பிப்-201920:05:06 IST Report Abuse
rajan.  கால் காசு பெறாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஒட்டு போட வைத்து ஆட்சியை பிடிச்சு மொத்தமா குடும்ப ஆட்டைய போடுறது மட்டும் என்னவாம் அரசியல் லாபம் கருதிய சுயநலவாதம் தானே. மக்களுக்காக நாடு நலனுக்காக என்று என்னிக்காச்சும் ஒரு அரசியவாதியாச்சும் இன்னிக்கு உழைக்கிறீங்களா ??? இல்லையே. எப்படி எல்லாம் மக்களை ஏமாத்தலாம் என்பது தான் இன்றய அரசியல்வாதிகளின் கூட்டு கூட்டணி எல்லாமே. என்னமோ புதுசா வேதம் படிச்சு காட்டுறீங்களாகும் நாயுடு காரு.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
21-பிப்-201919:59:40 IST Report Abuse
rajan.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X