வங்கதேச அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 81 பேர் பலி

Updated : பிப் 21, 2019 | Added : பிப் 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement

தாக்கா : வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்து உள்ளது.






வங்கதேச தலைநகர் தாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி, ரசாயன பொருட்கள் வைத்திருக்கும் குடோனாகவும் செயல்பட்டு வந்துள்ளது. ரசாயன பொருட்களில் ஏற்பட்ட தீ பரவிய, அடுக்கு மாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. இதில் 81 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.




தீயை அணைத்து, கட்டிடத்திற்குள் சிக்கி உள்ளவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். கேஸ் சிலிண்டரில் இருந்து கசிந்த கேஸ், ரசாயன பொருட்கள் மீது பட்டதே தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ, நான்கு அடுக்குமாடி முழுவதும் பரவி உள்ளது. வீடுகளிலும் ரசாயன பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தீ வேகமாக பரவ காரணமாக அமைந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தீ விபத்தில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 10 சைக்கிள் ரிக்ஷாக்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. 200 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர். தீ பரவியதும் அப்பகுதியில் கூட்டம் கூடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், உள்ளே சிக்கியவர்கள் வெளியேற வழியில்லாமல் போனதாலேயே அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
22-பிப்-201904:03:35 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-பிப்-201920:25:37 IST Report Abuse
K.Sugavanam ஆழ்ந்த அனுதாபங்கள்..அது என்ன ரசாயனப்பொருளோ,அவ்ளோபேரும் வச்சிருக்காங்க?
Rate this:
Share this comment
Cancel
கோமாளி - erode,இந்தியா
21-பிப்-201912:17:45 IST Report Abuse
கோமாளி இந்தியப் புவியியலின் புற்று நோய் வங்கதேசம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X