பொது செய்தி

தமிழ்நாடு

மிரட்டல் விடுத்த கலெக்டருக்கு பெண் விஏஓ பதில்

Added : பிப் 21, 2019 | கருத்துகள் (73)
Advertisement
மிரட்டல் விடுத்த கலெக்டருக்கு பெண் விஏஓ பதில்

நெல்லை : மத்திய அரசின் சார்பில் கிஷான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கான கணக்கெடுப்பு நடக்கிறது. சில இடங்களில் கிராம நிர்வாக அதிகாரி பணியில் இல்லாததால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மனுக்களை கலெக்டரிடமே நேரடியாக அளிக்கின்றனர். வயது முதிர்ந்த ஒருவர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார். எனவே கலெக்டர் ஷில்பா அனைத்து தாசில்தார்களுக்கும் ஒரு ஆடியோ தகவல் வெளியிட்டார். அதில் பணியிடத்தில் இல்லாத வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இந்த ஆடியோ கிராம நிர்வாக அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு பெண் வி.ஏ.ஓ., விடுத்துள்ள பதில் ஆடியோவில் கலெக்டரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இரவு வரையிலும் மனுக்கள் வாங்க வேண்டும் என்கிறார் கலெக்டர் . தனியார் நிறுவனத்தை விட கசக்கி பிழிகிறார்கள் என அங்கலாய்த்தார். இது தொடர்பாக இன்று வியாழன் பிற்பகல் 3 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
27-பிப்-201906:36:33 IST Report Abuse
ராஜேஷ் இந்தமாதிரி வேலை பார்க்க வக்கில்லாமல் மாவட்ட ஆட்சியருக்கு வாய்வழி பதிலளிக்கும் இந்தமாதிரி vao களை வீட்டுக்கு அனுப்பினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் . எந்த வேலைக்கு ஊராட்சி அலுவகத்துக்கு வந்தாலும் பிணந்தின்னும் கழுகுகள் மாதிரி அரித்து பணத்தை பிடுங்குபவர்களின் பதிலை பாரு ?
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
26-பிப்-201915:38:20 IST Report Abuse
JIVAN இந்த பெண்மணியிடம் இப்போதான் நேரடியா மனு கொடுத்தார்களா இதுவரை இவரிடம் எந்த காரணத்திற்க்காகவும் மனுகொடுக்கவில்லையா இல்லை அவற்றை இவர் வாங்கவிரும்பவில்லையா , ஏன் இவ்வளவு அக்கறை,
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
26-பிப்-201904:58:44 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மனிதநேயம் கட்டாயம் தேவை இந்த கடும் கோடை லே (விஏஓ க்களும் மனுஷா தானுங்க ) இந்தம்மா கலெக்டர்னா வசதிகள் இருக்குமே ஆனால் கீழ வேலை செய்வோரை கொத்தடிமையா நடத்தக்கூடாதுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X