மோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு

Updated : பிப் 21, 2019 | Added : பிப் 21, 2019 | கருத்துகள் (245)
Advertisement

புதுடில்லி : வரும் லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என 83.89 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.5 ஆண்டு மோடி அரசில் நிலவும் சில முக்கிய கேள்விகளை முன்வைத்து டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிப்.,11 முதல் 20 வரை ஆன்லைனில் 9 மொழிகளில் டைம்ஸ் குழுமத்தின் 13 மீடியா கிளைகள் இந்த கருத்து கணிப்பை நடத்தி உள்ளன.


இதில் பெறப்பட்ட முடிவுகள் :* லோக்சபா தேர்தலுக்கு பின் யார் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்?

மோடி தலைமையிலான பா.ஜ., அரசு - 83.03 %

காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சி - 9.25%

பிரதமராக மோடி அல்லாத பா.ஜ., ஆட்சி - 4.25 %

மெகா கூட்டணி அரசு - 3.47 %

* இன்று லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் யார் பிரதமராக வேண்டும் ?

நரேந்திர மோடி - 83.89%

ராகுல் - 8.33 %

மம்தா பானர்ஜி - 1.44 %

மாயாவதி - 0.43 %

வேறு யாராவது ஒருவர் - 5.92 %


* 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில் ராகுலின் செல்வாக்கு அதிகரித்துள்ளதா?

இல்லை - 63.03 %

ஆம் - 31.15 %

அப்படி சொல்ல முடியாது - 5.82 %


* மோடி அரசின் செயல்பாட்டிற்கு நீங்கள் தரும் தரம்?

மிக சிறப்பு - 59.51 %

சிறப்பு - 22.29 %

மோசம் - 9.94 %

சராசரி - 8.25 %

* மோடி அரசின் பெரிய சாதனை ?

ஏழைகளுக்கு அதிக வசதிகள் - 34.39 %

ஜிஎஸ்டி - 29.09%

தூய்மை இந்தியா - 18.68 %

சர்ஜிக்கல் ஸ்டிரைக் - 17.84%


* மோடி அரசின் பெரிய தோல்வி?

ராமர் கோயில் பணிகளை முன்னெடுக்காதது - 35.72 %

வேலைவாய்ப்பு உருவாக்கம் - 29.52%

பண மதிப்பிழப்பு - 13.5 %

சகிப்புதன்மை குறைவு - 12.97%

மற்றவை - 8.29%

* லோக்சபா தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கும் பிரச்னை?

வேலைவாய்ப்பு - 40.21%

விவசாயிகள் பிரச்னை - 21.82%

ராமர் கோயில் - 10.16 சதவீதம்

ஜிஎஸ்டி அமல் - 4.52%

மற்ற பிரச்னைகள் - 23.3%


* மோடி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக நினைக்கிறீர்களா?

இல்லை - 65.51 %

ஆம் - 24.26 %

அப்படி சொல்ல முடியாது - 10.24%

* பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கியது வரும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு உதவுமா?

ஆம் - 72.66 %

இல்லை - 15.25%

அப்படி சொல்ல முடியாது - 12.1%

* ரபேல் சர்ச்சை லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு எதிர்மறை தாக்கத்தை தருமா?

இல்லை - 74.59%

ஆம் - 17.51 %

அப்படி சொல்ல முடியாது - 7.9%

Advertisement
வாசகர் கருத்து (245)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-பிப்-201903:58:37 IST Report Abuse
meenakshisundaram நாங்க இதை ஒப்புக்க மாட்டோம், எங்களுக்கு 'லயோலா' கல்லூரி அறிவாளிகள் கடைசி நேரத்திலே வெளியிடுவானுங்களே அதுதான் பிடிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
25-பிப்-201905:15:16 IST Report Abuse
Sukumaran Sankaran Nair என்று இந்த வெட்டிப் பேச்சுகளாலும்,வாக்குறுதிகளாலும் பரப்புரைகள் ,விளம்பரங்கள் நிறுத்தப்படுகிறதோ அன்றுதான் உண்மையான தலைவரை காண்பதும்,அவர் வழியை பின்பற்றுவது நடந்தேறும்.இளந்தலைமுறைகள் நம்மைப்பார்த்து நகைக்கும்படி இந்த பித்தலாட்ட அரசியல்வாதிகளை புகழ்ந்து தள்ளுவதாலேயே,உண்மை நிலவரங்கள் மறைக்கப்பட்டு, அநீதிகளும், வன்முறைகளும் தோன்றக்காரணமாகிறது. பாவிகள் தங்கள் பாவங்களை போக்க காசியில் குளிப்பதையும்,சிலருடைய பாதங்களை கழுவுதல் மூலம் தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்வது ,பிரபலப்படுத்துவது போன்றவைகள் இந்த காலத்திற்கு ஒவ்வாத,அவநம்பிக்கையைத்தான் ஏற்படுத்தும். தன்மை மாற்ற கலாசாரங்களால் புதிக்கப்பட்டு,தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது. நமது கண்கள் ஆய்வுக்கண்கள்.எதையும் ,தன்னிச்சையாக ஆராய்ந்து,உண்மையை தேடுவதே நமது முதன்மையான கோட்பாடாகும்.
Rate this:
Share this comment
Cancel
22-பிப்-201905:00:35 IST Report Abuse
ராநா பொதுவாகவே பாஜக மீது எதிர்ப்பு நிலைதான் இருக்கிறது. TOI பல கருத்துக்களை சமீப காலங்களில் வெளியிட்டிருக்கிறது. அப்போதெல்லாம் தினமலர் அந்த செய்தியை மறுபதிப்பு செய்யவில்லை. ஒன்று உறுதியாக தெரிகிறது. பாஜக ஆதரவு செய்திகள் வெளியிடுவது என்பது சில பத்திரிகைகளுக்கு கைவந்த கலை. அதன் மூலம் விளம்பர வருமானம் பல கோடிகள் கொட்டுகிறது. இதில் ஜாதி மற்றும் மதம் அடிப்படையிலான ஆதரவு உள் கணக்குகள் இருக்கின்றன. ஒவ்வொரு பத்திரிகையும் நடத்தும் அதிபர்களை கொண்டு ஆராய்ந்தால் நான் சொல்லும் விவரங்கள் நிச்சயமாக புரியும். ஜால்ரா அடிக்கும் பத்திரிகைக்கு இந்த அரசு பெரிய பதவிகளை கிடைக்க செய்திருக்கிறது. நான் குறிப்பிட விரும்பும் பெயர் நிச்சயமாக தினமலர் வெளியிடாது. உண்மையின் உரைகல் என்ற பத்திரிக்கை தர்மத்தை என்றோ பாஜகவின் உரைகல்லாக மாற்றிவிட்டார்கள். இது தாமரை சின்னம் கொண்ட, தாமரை கட்சிக்காக உழைக்கும் பத்திரிக்கை. இதற்குமேல் சொல்லி புரிய வேண்டியதில்லை.
Rate this:
Share this comment
Sandru - Chennai,இந்தியா
22-பிப்-201905:52:27 IST Report Abuse
Sandruஉண்மைதான் ....
Rate this:
Share this comment
22-பிப்-201908:20:52 IST Report Abuse
VIJAIAN CAyyo paavam stomach burning??????...
Rate this:
Share this comment
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
22-பிப்-201915:31:39 IST Report Abuse
ஆனந்த் தமிழக எல்லை தாண்டா தமிழனின் பார்வை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X