பரிதவிக்குது பகுஜன்; சிடுசிடுக்குது சமாஜ்வாதி

Updated : பிப் 21, 2019 | Added : பிப் 21, 2019 | கருத்துகள் (43)
Advertisement
மாயாவதி, அகிலேஷ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி

புதுடில்லி: உ.பி.,யில் போட்டியிடும் 38 லோக்சபா தொகுதிகளுக்கு ஆள் கிடைக்காமல் பகுஜன் கட்சி பரிதவிக்கிறது.


சமாஜ்வாதியுடன் கூட்டணி


வரும் லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து பகுஜன் கட்சி போட்டியிடுகிறது. சீட் கேட்டு பலர் வருவார்கள் என எதிர்பார்த்தார் பகுஜன் தலைவர் மாயாவதி. நினைத்தது ஒன்று; நடப்பது மற்றொன்று.சீட் கேட்டு வரும் கட்சியினர் எண்ணிக்கை குறைவாக இருப்பது மாயாவதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையும் இதற்கு ஒரு காரணம். அங்கு மோடிக்கு உள்ள செல்வாக்கும், அவரது அதிரடி பிரசாரமும், பா.ஜ., தொண்டர்களை உசுப்பேற்றி வைத்துள்ளன.மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவி திட்டம்; வருமான வரி விலக்கை அதிகரித்தது போன்றவையும் அங்கு மக்களை கவர்ந்துள்ளன. காங்கிரசில் பிரியங்காவின் வருகையும், அவரது பிரசாரம் எடுபடும் என்ற எண்ணமும் பகுஜன் கட்சி தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.


ஒரு சீட் பெற ரூ.12 கோடி:பகுஜன் கட்சியில் சீட் பெற, அதிகாரப்பூர்வமற்ற முறையில் கட்சி நிதியாக ரூ.12 கோடி தர வேண்டும். பலரும் இந்த தொகை மிகவும் அதிகம் என நினைக்கிறார்கள். கிராக்கி இல்லாததால் இந்த தொகையை ரூ.5 கோடியாக குறைக்கப் போகிறாராம் மாயாவதி. இதுவும் அதிகமான தொகை தான் என கருதுகிறார்கள் பலர்.போட்டியிட விரும்பும் பலர் கூறும்போது, ‛‛வேறு கட்சி சார்பில் சீட் கேட்போம் அல்லது சுயேச்சையாக போட்டியிடுவோம். பகுஜன் கட்சியால் இனிமேல் பயனில்லை'' என்கிறார்கள்.சில மாதங்களுக்கு முன் முகுல் உபாத்யாயா என்ற பகுஜன் தலைவர் கூறியபோது, ‛‛அலிகர் தொகுதியில் போட்டியிட நான் விரும்பியபோது அதற்காக மாயாவதி பணம் கேட்டார்'''என்று குற்றம்சாட்டினார். இதை மறுத்த பகுஜன் கட்சி, முகுலை கட்சியை விட்டு நீக்கியது.


எந்த தொகுதி யாருக்கு


சமாஜ்வாதி37 தொகுதியிலும் பகுஜன் 38 தொகுதிகளில் போட்டியிட ஒப்பநதம் செய்துள்ளன. ஆனால் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு கட்சிகளும் தொகுதிகளை பிரித்து கொண்டுள்ளன. இதில் இன்னமும் மோதல் முட்டல் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-பிப்-201910:11:22 IST Report Abuse
VIJAIAN C Boochi marundhu will comment only if news involves criticising so called upper caste,if any scams, scandals involving so called lower caste leaders,no comments!!!!
Rate this:
Share this comment
Cancel
Rajan - chennai,இந்தியா
22-பிப்-201908:15:13 IST Report Abuse
Rajan இருவரும் உத்தமர் அல்ல..
Rate this:
Share this comment
Cancel
Rajan - chennai,இந்தியா
22-பிப்-201908:14:31 IST Report Abuse
Rajan முலாயம் இதே போன்று உபி தேர்தல் முன்னரும் மகனுடன் பிடிவாதம் பிடித்தார். கட்சியை கைப்பற்றினார் அகிலேஷ். அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகள். முலாயமால் வளர்த்தவர்கள் இப்போது அகிலேஷ் பக்கம் சாய்ந்துவிட்டனர் பதவி சுகத்திற்கு, தந்தையை உதாசீனம் செய்யும் குணம் பெரிய அரசியல்வாதிகளிடமும் உள்ளது போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X