பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'காஷ்மீர் தாக்குதலின் போது
படப்பிடிப்பில் இருந்த மோடி'

புதுடில்லி, 'ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, பிரதமர் மோடி, படப்பிடிப்பில், 'பிசி'யாக இருந்தார்' என, காங்கிரஸ் குற்றம் சாட்டிஉள்ளது.

 'காஷ்மீர், தாக்குதலின், போது, படப்பிடிப்பில், இருந்த, மோடி'

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், சமீபத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள், வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில், காங்., செய்தி தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா, டில்லியில்

செய்தியாளர்களிடம் கூறியதாவது:தன்னை மிகப் பெரிய தேசப்பற்றாளர் என, பிரதமர் மோடி கூறி வருகிறார்.ஆனால், காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, மோடி,ஆவணப்படத்திற் கான படப்பிடிப்புக்காக, உத்தரகண்ட் மாநிலத்தில், 'பிசி'யாக இருந்தார்.

கேமராக்களுடன், படகு சவாரி செய்துள்ளார். புல்வாமா தாக்குதலால் வேதனையடைந்த மக்கள், உணவு சாப்பிட மனம் இல்லாத நிலையில் இருந்த னர்.ஆனால், பிரதமர் மோடி, சொகுசு விடுதியில், டீ, சமோசாவை, அரசு செலவில் சாப்பிட்டுள்ளார். தன் சுய விளம்பரத்திற்கான படப்பிடிப்பில் பிசியாக இருந்துள்ளார்.இந்த உலகத்தில், இது போன்ற பிரதமரை எங்குமே பார்க்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

பயங்கரவாத தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம்

Advertisement

அடைந்த சம்பவத்தின் துக்கம், மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை. ஆனால், தங்களுக்கு தான் தேசபக்தி உள்ளது என மார் தட்டிக் கொள்ளும், பா.ஜ.,வினருக்கு, நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதில் தான், ஆர்வம் உள்ளது.
அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி


Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
23-பிப்-201910:41:37 IST Report Abuse

Nisha Rathiபிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: ஏற்கனவே திட்டமிட்டபடி வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக உத்தரகண்ட் மாநிலத்தில் மோடி சென்று கொண்டு இருந்தார். அன்று காலை 7 மணிக்கு டேராடூனை அவர் அடைந்தார். பருவநிலை மோசமாக இருந்ததால் 4 மணி நேரம் மோடி காத்திருக்க வேண்டி இருந்தது. ஜிம் பூங்காவுக்கு காலை 11.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புலிகள் சரணாலயம், சுற்றுப்புற சூழல் சுற்றுலா மற்றும் மீட்பு மையத்தை துவக்கி வைத்தார். பின், ஒரு படகில் கலஹரில் இருந்து திகாலா வனத்திற்கு சென்றார். பிற்பகல் 3.30 மணிக்கு மோடிக்கு புல்வாமா தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வனத்திற்குள் இருந்ததால், போதிய நெட்வொர்க் இன்றி, பிரதமரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரிடம் தகவல் தெரிவிக்க 25 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது. பேரணி ரத்து தகவல் தெரிந்ததுமே ருத்ராபூரில் நடக்க இருந்த பேரணியில் மோடி பேசும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மாலை 4 மணி முதல் 4.45 வரை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் ஆகியோரிடம் இருந்து புல்வாமா பற்றிய தகவல்களை போனில் மாறி மாறி கேட்டபடி இருந்தார் மோடி. அதன் பிறகு தான் அவர் அங்கிருந்து புறப்பட்டார். உடனே டில்லிக்கு திரும்புவதற்குத் தான் மோடி விரும்பினார். ஆனால், பருவநிலை மோசமாக இருந்ததால் அவரால் உடனே கிளம்ப முடியவில்லை. குண்டு குழியான சாலை பயணம் அதனால் தான் ருத்ராபூர் கூட்டத்தில் மாலை 5.15 மணிக்கு, அலைபேசியின் மூலம் பேச முடிவெடுத்தார். ஹெலிகாப்டர் பறக்கும் சூழ்நிலை இல்லாததால், டில்லி விமானத்தில் ஏற ராம்நகரில் இருந்து பெரெலி என்ற இடத்திற்கு குண்டும் குழியுமான சாலையில் பயணம் செய்தார் மோடி. டில்லிக்கு தாமதமாகத் தான் மோடியால் வர முடிந்தது. அதுவரை மோடி எதுவும் சாப்பிடவில்லை. தாமதமாக தகவல் தந்ததற்காக கோபத்திலும் அவர் இருந்துள்ளார். இதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அஜித் தோவல் கேட்டுள்ளார். ரவிசங்கர் பதில் முன்னதாக, காங்., தலைவர் ரண்தீப் சுர்ஜிவாலா, ‛‛புல்வாமா தாக்குதல் நடந்த பிற்பகல் 3.10 மணிக்கு, டிஸ்கவரி சேனல் எடுக்கும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு, மோடி சமோசா சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் என குற்றம்சாட்டி இருந்தார்.

Rate this:
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
22-பிப்-201921:32:18 IST Report Abuse

M S RAGHUNATHANYesterday the great economist, Harvard alumni, the so called Mr Clean Mr P Chidambaram reacted that it is wrong to boycott Kashmiris and Kashmiri products. It is correct. If Kashmir is an integral part of India, then why special status even after 70 years. What did the Congress Government which ruled the country for more than 50 years gain by according the special status. If Kashmir is a part of India then why no Indian is allowed to acquire property there. If Kashmiri students in India are to be protected why the Congress allowed the Muslim people drove away the Pundits from their homes and were made refugees in their own nation. What is the answer from this intelligent politician ? Lastly why not the Congress party nominate the real heirs of Mahatma Ghandhi who also made great sacrifice for indepence. Let them shri Gopalakrishna Ghandhi, the grand son Ghandhi and our own Rajaji as a prime ministerial candidate and tell the whole India who is the rightful heir of Ghandhi and expose Rahul. But shri. Chidambaram is a coward and hanker after power and to get power he will even lick the shoes of Priyanka's. Son

Rate this:
blocked user - blocked,மயோட்
23-பிப்-201906:26:28 IST Report Abuse

blocked user"What is the answer from this intelligent politician?" - Don't insult intelligent people... This man is as dumb as Vinci ...

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
22-பிப்-201918:31:05 IST Report Abuse

sahayadhasஎத்தனை பாட்டு, எத்தனை பைட்.

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X