அரசியல் செய்தி

தமிழ்நாடு

தைலாபுரம் தோட்டத்தில் விருந்து இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., -பங்கேற்பு

Added : பிப் 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement


பா.ம.க., நிறுவனர் ராமதாசின், தைலாபுரம் தோட்டத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு, இன்று தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, ஏழு லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதே நேரத்தில், அ.தி.மு.க., தலைமையிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறியதால், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், இளைஞரணி தலைவர், அன்புமணி உள்ளிட்டோர், உற்சாகம் அடைந்துள்ளனர். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ராமதாசின் வீடு அமைந்துள்ள, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு வரும்படி, முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர், பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.இந்த அழைப்பை ஏற்று, இன்று முதல்வரும், துணை முதல்வரும், தைலாபுரம் தோட்டம் செல்கின்றனர். அங்கு, சைவ, அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. இந்த விருந்தில் பங்கேற்கும்படி, அமைச்சர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.விருந்துக்கு பின், பா.ம.க., போட்டியிடும், ஏழு தொகுதிகள் எவை என்பது குறித்து, விவாதிக்கப்பட உள்ளது. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-பிப்-201913:39:11 IST Report Abuse
தமிழ்வேல் பானக்கம் உண்டா...
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
22-பிப்-201910:56:01 IST Report Abuse
Girija தேமுக வை சேர்த்தால் கூட்டணி புட்டுக்கும் என்று, சாப்பிட்டு வரட்டும் அப்புறம் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-பிப்-201903:31:33 IST Report Abuse
Bhaskaran தைலாபுரத்தில் கொண்டாட்டம் அறிவாலயத்தில் திண்டாட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X